2026 ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து : 11ம் தேதி கோலாகல தொடக்கம் : வரலாற்றில் முதன் முறை" 48 அணிகள்" பங்கேற்பு!

4 வருடங்​களுக்கு ஒரு முறை நடை​பெறும் உலகக் கோப்பை கால்பந்து திரு​விழா வரும் 11-ம் தேதி கோலாகல​மாக தொடங்​க​வுள்​ளது.
2026 FIFA World Cup football, 11th start, 48 teams participating for the first time in history
2026 FIFA World Cup football, 11th start, 48 teams participating for the first time in history google
1 min read

புகழ்பெற்ற கால்பந்து உலக கோப்பை

உலக புகழ்பெற்ற ஃபிஃபா கால்பந்து உலக கோப்பையானது வரும் 11-ம் தேதி தொடங்கி ஜூலை 19-ம் தேதி வரை கோலாகலமாக நடைப்பெற உள்ளது .

ஒலிம்​பிக் போட்​டிகளைப் போலவே மிக பிரம்மாண்ட​மான முறை​யில் நடை​பெறும் போட்​டிகளில் இது முக்கி​யத்​து​வம் வாய்ந்த போட்​டி​யாகக் உலகளவில் கவனமும் ஈர்பும் பெற்று வருகிறது

வரலாற்றில் முதன் முறை 48 அணிகள் பங்கேற்பு

வரலாற்றில் முதன்முறையாக 32 அணி​களுக்​குப் பதிலாக மொத்​தம் 48 அணி​கள் பங்கேற்கின்றன .குறிப்பாக இந்த உலகக் கோப்பை கால்​பந்து திரு​விழாவை அமெரிக்​கா, கனடா, மெக்​ஸிகோ ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்​துகின்​றன.

போட்டி நடைப்பெறும் அட்டவணை

இந்த புகழ் பெற்ற உலக கால்பந்து கோப்பையானது ,3 நாடு​களில் மொத்​தம் 16 மைதானங்​களில் போட்டி நடை​பெற இருக்கிறது ,போட்​டிகள் இந்​திய நேரப்​படி நள்​ளிரவு 12.30 மணி, அதி​காலை 3.30 மணி, காலை 6.30 மணி, 9.30 மணி ஆகிய நேரங்​களில் நடை​பெறுகிறது என்றும்

குரூப் சுற்​றின் முடி​வில், ஒவ்​வொரு குரூப்​பிலும் முதல் 2 இடங்​கள் பிடிக்​கும் அணி​கள் மற்​றும் குரூப் வாரி​யாக 3-ம் இடம் பெறும் 8 அணி​களும் அடுத்த சுற்​றுக்கு (ரவுண்ட் 32) தகுதி பெறும். அதன்​பின்​னர் கால், அரை, இறு​திச் சுற்​றுப் போட்​டிகள் நடைபெறும் என்று தெரிவித்துள்ளது

16 நகரம் 104 ஆட்​டங்​கள், பிரம்மாண்டமான ஏற்பாடு

இந்த உலக கோப்பையானது ,மொத்​தம் 104 ஆட்​டம், 16 நகரங்​களில் மிக பிர​மாண்​ட​மாக அமைந்​துள்ள மைதானங்​களில் விளை​யாடப்​பட​வுள்​ளன. இறு​திப் போட்​டி, ஈஸ்ட் ருதர்ஃ​போர்​டில் அமைந்​துள்ள ‘மெட்​லைஃப் ஸ்டேடி​யத்​தில்’ நடை​பெற இருபதாகவும் ,

இத்​தொடர் 16 வெவ்​வேறு நகரங்​களில் அமைந்​துள்ள 16 மைதானங்​களில் நடை​பெறவுள்​ளது. ருதர்ஃ​போர்​டில் அமைந்​துள்ள மெட்​லைஃப் மைதானம் 82,500 பார்​வை​யாளர்​கள் அமரும் திறன் கொண்​டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

குரூப்பில் இடம்பெற்றுள்ள அணிகள் விவரம்

குரூப் ‘ஏ’: மெக்சிகோ, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, செக் குடியரசு

குரூப் ‘பி‘: கனடா, போஸ்னியா & ஹெர்சகோவினா, கத்தார், சுவிட்சர்லாந்து

குரூப் ‘சி’: பிரேசில், மொராக்கோ, ஹைதி, ஸ்காட்லாந்து

குரூப் ‘டி’: அமெரிக்கா, பராகுவே, ஆஸ்திரேலியா, துருக்கி

குரூப் ‘இ‘: ஜெர்மனி, குராசாவோ, ஐவரி கோஸ்ட், ஈக்வேடார்

குரூப் ‘எஃப்: நெதர்லாந்து, ஜப்பான், சுவீடன், துனிசியா

குரூப் ‘ஜி’: பெல்ஜியம், எகிப்து, ஈரான், நியூஸிலாந்து

குரூப் ‘ஹெச்’: ஸ்பெயின், கேப் வெர்டே, சவுதி அரேபியா, உருகுவே

குரூப் ‘ஐ’: பிரான்ஸ், செனகல், ஈராக், நார்வே

குரூப் ‘ஜே’: அர்ஜெண்டினா, அல்ஜீரியா, ஆஸ்திரியா, ஜோர்டான்

குரூப் ‘கே’: போர்ச்சுகல், காங்கோ, உஸ்பெகிஸ்தான், கொலம்பியா

குரூப் ‘எல்’: இங்கிலாந்து, குரோஷியா, கானா, பனாமா

நேரடி ஒளிப்பரப்பு

பிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரை இந்தியாவில் ஜீ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ஒளிபரப்புகிறது.இதற்கான ஒப்பந்தமும் இறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

=====================

logo
Thamizh Alai
www.thamizhalai.in