ரத்தரத்த வகைகள் விஞ்ஞானிகள் ஆய்வு
new blood ldentify தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தின் சிரிராஜ் மருத்துவமனை ஆராய்ச்சியாளர்கள், 5.44 லட்சம் பேருக்கும் மேற்பட்டவர்களின் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்தனர்.
அவர்கள் பரிசோதனைகளின் போது, பொதுவான 'ஏ','பி','ஓ' ஆகிய ரத்தக் குழு அமைப்பில் ஏற்படும் சிறு மாறுபாடுகளை ஆராய்ந்தனர்.
8 ஆக பிரிக்கப்பட்ட ரத்த காரணிகள்
அப்போது 0.15 சதவீத நோயாளிகள் மற்றும் 0.03 சதவீத ரத்த கொடையாளர்களின் ரத்த மாதிரிகளில் வித்தியாசங்கள் தென்பட்டுள்ளன. அந்த மாதிரிகளை தீவிரமாக ஆராய்ந்தபோது,
அரிய வகை ரத்தம்
ஒரு நோயாளி மற்றும் ரத்த தானம் செய்த இரண்டு பேருக்கு, 'பி(ஏ)' என்ற அரிய ரத்தம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது 'பி' ரத்த வகையின் கலப்பு வடிவம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ரத்த வகைகள், ரத்த சிவப்பணுக்களின் மேற்பரப்பில் இருக்கும் 'ஆன்டிஜென்கள்' எனப்படும் புரதம் மற்றும் சர்க்கரை அளவை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுகின்றன.
'ஏ', 'பி' ஆன்டிஜென்கள் மற்றும் ஆர்.எச்., காரணி ஆகியவற்றின் கலவையால், 'ஏ', 'பி', 'ஏபி', 'ஓ', என்ற குழுக்கள், 'நெகட்டிவ்', 'பாசிட்டிவ்' என்ற காரணிகள் அடிப்படையில், ரத்த வகைகள் எட்டாக பிரிக்கப்படுகின்றன.
ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தல்
ஆனால் தற்போது கண்டறியப்பட்டுள்ள 'பி(ஏ)' ரத்த வகை என்பது 'ஏ.பி.ஓ.,' மரபணுவின் மாற்றம் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். அந்த ரத்தத்தில் 'பி' ஆன்டிஜென்களுடன், 'ஏ' ஆன்டிஜென்களின் தன்மை சிறிது இருந்ததால், பரிசோதனையில் குழப்பம் ஏற்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
மரபணு வினோதம்
'பி(ஏ)' ரத்த வகை தோராயமாக ஒரு லட்சத்து 80,000 பேரில் ஒருவருக்கு காணப்படும் ஒரு மரபணு வினோதம் என்று கூறியுள்ளனர். அரிய ரத்த வகைகளைக் கொண்ட நபர்களுக்கு மாற்று ரத்தத்தை ஏற்ற முடியாது.
இதனால் அவசர காலத்தில் தகுந்த ரத்தம் கிடைக்காமல் உயிரிழக்க நேரிடும் அபாயம் உள்ளது. எனவே உலக சுகாதார அமைப்பு, ரத்தப் பரிசோதனை முறைகளை மேம்படுத்துவதுடன், உலகளவில் தானம் செய்வோரின் தரவுகளை விரிவுபடுத்த வேண்டும் என்று தாய்லாந்து ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
உலகில் 7% பேருக்கு அரியவகை ரத்தம்
அரிய ரத்த வகைகள் உலக மக்கள் தொகையில், 7 சதவீதத்தினருக்கு மட்டுமே 'ஓ - நெகட்டிவ்' ரத்த வகை காணப்படுகிறது. உலகளாவிய நன்கொடையாளர் என்று இது அழைக்கப்படுகிறது.
ஏனெனில் எந்த ரத்த வகையைச் சேர்ந்தவருக்கும் 'ஓ - நெகட்டிவ்' ரத்தத்தை செலுத்த முடியும் எனவே தொடர்ந்து ரத்த தானம் செய்வதையும் விரிவு படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
புதிய ரத்த வகைகள் கண்டுபிடிப்பு
'தங்க ரத்தம்' என்று சொல்லப்படும் ஆர்.எச்., பூஜ்யம் என்ற ரத்த வகை உலகில் 50 பேருக்கு மட்டுமே உள்ளது. இதில் எந்த ஆன்டிஜென்களும் இல்லாததால் அரிதாகப் பார்க்கப்படுகிறது ஐரோப்பிய நாடான பிரான்சின் குவாடலுப் தீவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு 'குவாடா-நெகட்டிவ்' என்ற அரிய வகை ரத்தம் கண்டுபிடிக்கப்பட்டது.
கர்நாடக பெண்ணுக்கு அரியவகை ரத்தம்
கர்நாடகாவின் கோலாரில் 38 வயதுடைய ஒரு பெண்ணுக்கு 'கிரிப்' என்ற மிகவும் அரிதான ரத்த வகை இருப்பது, இந்தாண்டு துவக்கத்தில் கண்டறியப்பட்டது. இதனடிப்படையில் தொடர்ந்து ரத்த வகைகளும் புதிதாக உருவாகி வருகிறது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.