Kantara: காந்தாரா வசூல் இவ்வளவா? உலகளவில் பேசப்படும் ரிஷப் ஷெட்டி!

Kantara Chapter 1 Box Office Collection : காந்தாரா சாப்டர் 1 அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகியுள்ள நிலையில், தற்பொழுது வரை பிளாக்பஸ்டர் பட்டியிலில் இணைந்து மாபெரும் வசூல் சாதனையை நிகழ்த்தி வருகிறது.
Kantara Chapter 1 Box Office Collection Worldwide Day 10 in Tamil
Kantara Chapter 1 Box Office Collection Worldwide Day 10 in Tamil
1 min read

காந்தாரா வரவேற்பு :

Kantara Chapter 1 Box Office Collection Worldwide : காந்தாரா சாப்டர் 1 கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து உருவான காந்தாரா சாப்டர் 1 படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. இப்படத்தை Hombale பிலிம்ஸ் தயாரித்திருந்தது. இப்படத்தில் கதாநாயகியாக ருக்மிணி வசந்த் நடிக்க, குல்சன், ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். உலகளவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த காந்தாரா சாப்டர் 1 படத்திற்கு மக்கள் அமோக வரவேற்பை கொடுத்துள்ளனர்.

தேசிய விருது :

2022 ஆம் ஆண்டு வெளியான காந்தாரா முதல் படத்திற்கு நடிகர் ரிஷப்ஷெட்டி தேசிய விருது பெற்றிருந்தார். இதைத்தொடர்ந்து, மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் உருவாகி வந்த காந்தாரா சாப்டர் 1 ஆம் பாகம், அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகி மாபெரும் எதிர்பார்பபை சரிசெய்து, வெற்றி கண்டது. படம் வெளிவந்து 9 நாட்கள் ஆன நிலையில், இப்பொழுது வரை படம் பார்த்தவர்கள், மீண்டும் காந்தாராவை காணச் செல்கின்றனர். 125 கோடியில் உருவாகி வெளியான இந்த திரைப்படம் தொடர்ந்து வசூலை வாரி குவித்து வருகிறது.

இப்படம் வெளிவந்து 10 நாட்கள் ஆன நிலையில், இதுவரை இப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 10 நாட்களில் காந்தாரா சாப்டர் 1 படம் உலகளவில் ரூ. 600 கோடியை எட்டியுள்ளது. இப்படம் ரூ. 500 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைந்து விட்டதை அடுத்து, இப்படம் 1000 கோடியை கடந்து சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜமௌலி வாழ்த்து

இந்தியாவின் பிரம்மாண்ட திரைப்படமாக கருதப்பட்ட பாகுபலி திரைப்படத்தை இயக்கிய ராஜமௌலி. இப்படத்தை பார்த்து விட்டு ரிஷப்ஷெட்டியின் நடிப்பையும், இயக்கத்தையும் புகழ்ந்து தள்ளியுள்ளார். அதிலும், ரிஷப்ஷெட்டிக்கு காந்தாரா சாப்டர்-1 படத்திற்கு, தேசிய விருது கிடைக்கவில்லை என்றால், நான் ஆச்சரியப்படுவேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க : Kantara 2 : IMDb-ல் காந்தாரா நடிகர்கள்! உலகத்தை உலுக்கிய காந்தாரா!

ஐஎம்டிபியில் காந்தாரா

இதைத்தொடர்ந்து திரைபிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் படம் குறித்து புகழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், ஐஎம்டிபி இப்படம் குறித்து வாராந்திர அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் அதிகமாக தேடியோர் பட்டியலில் காந்தார நடிகர்கள் வந்துள்ளனர். குறிப்பாக ரிஷப்ஷெட்டி 2 வது இடத்திற்கு வந்துள்ளார்.

========

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in