அம்பானியை முந்தினார் அதானி : ஆசியாவின் நம்பர் 1 பணக்காரர் வரிசையில் அதிரடி மாற்றம்!

அதானி குழுமம் தற்போது ஒரு ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு சாம்ராஜ்யமாக மாறியுள்ளது.
Adani Overtakes Ambani: Dramatic Shift in Asia's Richest Rankings:
Adani Overtakes Ambani: Dramatic Shift in Asia's Richest Rankings: source : google
1 min read

Adani Overtakes Ambani: Dramatic Shift in Asia's Richest Rankings:

இந்தியத் தொழில் உலகின் ஜாம்பவான்களுக்கு இடையிலான போட்டியில், அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி மீண்டும் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

புள்ளிவிவரப் போர்: அதானி vs அம்பானி

ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீடு வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, சொத்து மதிப்பில் ஏற்பட்ட உயர்வு அதானியை ஆசியாவின் பெரும் செல்வந்தராக மாற்றியுள்ளது.

  • கௌதம் அதானி: நிகர சொத்து மதிப்பு 92.6 பில்லியன் டாலர் (உலக அளவில் 19-வது இடம்).

  • முகேஷ் அம்பானி: நிகர சொத்து மதிப்பு 90.8 பில்லியன் டாலர் (உலக அளவில் 20-வது இடம்).

வளர்ச்சிக்கான காரணங்கள்:

அதானி குழுமப் பங்குகளின் தொடர் ஏற்றம், நேர்த்தியான கடன் மேலாண்மை மற்றும் புதிய முதலீடுகள் ஆகியவை இந்த அபார வளர்ச்சிக்கு உந்துசக்தியாக அமைந்துள்ளன.

டெக் உலகில் முதலிடம்: உலகளாவிய நிலவரம்

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இன்னும் தொழில்நுட்பத் துறை சார்ந்தவர்களே ஆதிக்கத்தைச் செலுத்தி வருகின்றனர்.

அடுத்தடுத்த இடங்களில்

அதன்படி எலான் மஸ்க் 656 பில்லியன் டாலருடன் முதலிடத்திலும் ஜெஃப் பெசோஸ் மற்றும் லாரி பேஜ் அடுத்தடுத்த இடங்களிலும் நீடிக்கின்றனர்.

உள்கட்டமைப்பில் இருந்து நுகர்வோர் சந்தை வரை

அதானி குழுமம் தற்போது ஒரு ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு சாம்ராஜ்யமாக மாறியுள்ளது.

பல்வேறு துறைகள்:

துறைமுகங்கள், மின்சாரம், சிமெண்ட், விமான நிலையங்கள் முதல் தரவு மையங்கள் வரை பல பிரிவுகளில் அசுர வளர்ச்சி.

பசுமைப் புரட்சி:

இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகளுக்காக 70 பில்லியன் டாலர் முதலீடு செய்யத் திட்டம்.

புதிய வியூகம்:

பிசினஸ்-டு-பிசினஸ் (B2B) மட்டுமின்றி, தற்போது நேரடியாகப் பொதுமக்களைச் சென்றடையும் நுகர்வோர் சந்தையிலும் (Consumer Market) அதானி குழுமம் தீவிரம் காட்டி வருகிறது.

சமூகப் பணியில் 7 பில்லியன் டாலர்

வெறும் லாபத்தை மட்டும் நோக்கமாகக் கொள்ளாமல், சமூக நலனிலும் அக்கறை செலுத்தி வருகிறார் கௌதம் அதானி.

இந்தியாவின் கிராமப்புறங்களில் கல்வி, சுகாதாரம் மற்றும் இளைஞர்களின் திறன் மேம்பாட்டிற்காக சுமார் 7 பில்லியன் டாலர் தொகையை அவர் ஒதுக்கியுள்ளார்.

150 டாலர் சந்தை மதிப்பு

தேசத்தைக் கட்டியெழுப்புதல் என்ற தத்துவத்துடன், 150 பில்லியன் டாலருக்கும் அதிகமான சந்தை மதிப்பைக் கொண்டுள்ள அதானி குழுமம், இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்கிறது.

முதல் தலைமுறைத் தொழிலதிபராக கௌதம் அதானி படைத்துள்ள இந்தச் சாதனை பலருக்கும் ஊக்கமளிப்பதாக உள்ளது.

===

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in