கிரீன்லாந்தை கைப்பற்றும் புதிய முயற்சி- வரி விதித்த டிரம்ப்!

அமெரிக்க அதிபர் டிரம்ப் கிரீன்லாந்தை கைப்பற்றுவதை கைவிட்டு தற்போது, கைப்பற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த மற்ற நாடுகளுக்கு 10 சதவிகிதம் வரிவிதித்துள்ளார்.
A new attempt to seize Greenland - Trump imposes taxes!
A new attempt to seize Greenland - Trump imposes taxes!google
1 min read

டிரம்ப்பால் தொடரும் உலக சிக்கல்

trump greenland deal ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்படுவதைபோல, கடந்த 2025 ஆம் ஆண்டு நோபல் பரிசு ஒவ்வொரு துறையாக, வெவ்வேறு பிரிகளாக பிரிக்கப்பட்டு வழங்கப்பட்டது. இதில் அமைதிக்கான நோபல் பரிசை தனக்கு வழங்குமாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து,பல்வேறு இடங்களில் தன்னை முன்னிறுத்தி வந்தார்.

ஆனால், அவருக்கு அமைதிக்கான நோபல் வழங்கப்படமால், வெனிசுலா நாட்டு பெண் மரியா கொரினா மச்சோடாவுக்கு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. இதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பாராட்டும் விதமாக பல வித கருத்துக்களை முன்வைத்தார். இதைத்தொடர்ந்து, புதிய பரிணாமம் அடைந்த அதிபர் டிரம்ப், உலக நாடுகள் அனைத்திற்கும் வரிவிதித்தால், இதனால் ஏற்றுமதி இறக்குமதி என பல்வேறு நாடுகளில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது.மேலும், தங்கம் மற்றம் வெள்ளி விலையும் உச்சம் தொட்டது.

இதைத்தொடர்ந்து, வெனிசுலா நாட்டை ஆக்கிரமித்து அந்நாட்டு அதிபர் மடூராவை கைது செய்து, நாடு கடத்தினார். இதற்கு பல நாடுகளில் இருந்து பல வித எதிர்ப்புகள் வலுத்தது. ஆனால், இதை கண்டுகொள்ளாமல் அடுத்த கட்டமாக தற்போது டென்மார்க்க நாட்டின், கிரீன்லாந்தை முழுவதும் கைப்பற்றப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கு பல தர நாடுகளில் எதிர்ப்பு வலுத்தது.ஆனால் தற்பொழுது, கிரீன்லாந்தை கைப்பற்ற அந்நாட்டின் மீது படையெடுக்க மாட்டோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். கிரீன்லாந்து விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என்ற முடிவை வாபஸ் பெற்றார் டிரம்ப்.

வரியை ஏற்றி நாட்டை கைப்பற்ற முயற்சிக்கும் டிரம்ப்

கிரீன்லாந்தை வாங்க எதிர்ப்பு தெரிவிக்கும் 8 ஐரோப்பிய நாடுகள் மீது பிப்.1 முதல் 10% வரி அமல் என டிரம்ப் அறிவித்திருந்தார். பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, சுவீடன், டென்மார்க், பின்லாந்து, நெதர்லாந்து, நார்வே நாடுகளுக்கு 10% வரி என்ற அறிவிப்பு வாபஸ் பெற்றார். கிரீன்லாந்தை கைப்பற்றும் ஒப்பந்தம் காலதாமதமாகும் பட்சத்தில் ஜூன் 1 முதல் வரி 25 சதவீதமாக உயரும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்கா தனது அடுத்த டார்கெட்டாக கிரீன்லாந்து நாட்டை குறிவைத்துள்ளது. வட அமெரிக்கக் கண்டத்தில் உள்ள பனிப் பிரதேசமான கிரீன்லாந்து ஐரோப்பிய நாடான டென்மார்க் அரசாட்சிக்கு உட்பட்டது. மேலும், "உலகத்தின் அமைதி தற்போது ஆபத்தான நிலையில் உள்ளது. சீனா கிரீன்லாந்தை விரும்புகிறது, அதைப்பற்றி டென்மார்க்கால் எதுவும் செய்ய முடியாது என கூறியுள்ளார். டிரம்ப் ஏற்படுத்தும் புதிய குழப்பங்களால், உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாக்கப்படுகிறது என உலக நாட்டு தலைவர்கள் முதல், சமூக ஆர்வலர்கள் வரை பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in