15 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் சமூக வலைத்தள பயன்பாட்டிற்கு தடை : பிரான்ஸ் அறிவிப்பு : செப்.1 முதல் அமல்..!

15 வயதிற்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதற்கு பிரான்ஸ் அரசு தடை விதித்துள்ளது
Ban on social media use for children under 15: France announces
Ban on social media use for children under 15: France announcesgoogle
1 min read

பிரான்ஸ் : சமூக வலைதள பயன்பாட்டிற்கு தடை

பிரான்ஸில் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த திட்டம் செப் 1 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திலேயே முதன்முறையாக அமல்

ஐரோப்பிய ஒன்றியத்தில் முதல் நாடாக பிரான்ஸ் 15 வயதிற்குட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதற்கு் தடை விதிக்ககோரிய மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது

சமூக ஊடகம் சிறுவர்களின் வளர்ச்சிக்கு பாதிப்பையே ஏற்படுத்தும், பிரான்ஸ் அதிபர்

இது சட்டத்தை அமலப்டுத்துவது தொடர்பாக ஏற்கனவே அந்நாட்டு அதிபர் இமானுவல் மேக்ரான், 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களில் கணக்கு தொடங்கி பயன்படுத்த விரைவில் தடை விதிக்கப்படும் என்றும்

சமூக வலைதளங்களை பார்த்து சிறுவர்கள் தவறான பாதைக்கு செல்வதையும், குற்றச் செயல்களில் ஈடுபடுவதையும் சுட்டிக் காட்டிய அவர், மனித வளம் வீணடிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்திருந்தார்

15 வயதுக்குட்பட்ட சிறுவர்களை பாதிப்பில் இருந்து மீட்கும் நோக்கத்துடன், அவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படும் என்று மேக்ரான் அறிவித்தார்.

அஸ்திரேலியாவிலும் தடை செய்யப்பட்டுள்ள சமூக வலைதளம்

இதைப்போலவே ,16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைதளம் பயன்படுத்த தடை விதித்தது குறித்து ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானீஸ் வெளியிட்டுள்ள வீடியோவில், குழந்தைகளுக்கு குழந்தை பருவத்தை கொடுக்கிறோம்" என தெரிவித்திருந்ததும் ,

பேஸ்புக், இன்ஸ்டராகிராம், யுடியூப், டிக்டாக்' போன்ற சமூக வலைதளங்கள் உலகம் முழுதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. சமூக வலைதளங்களால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என்று தெரிவித்திருந்தது ,

இந்தியாவில் அமல்படுத்துவது தொடர்பாக பரிசீலனை

இந்தநிலையில் , இந்தியாவிலும் சிறார்கள் சமூக ஊடக பய்ன்பாட்டிற்கு தடை விதிப்பது தொடர்பாக மத்திய பரிசீலித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

=========================

logo
Thamizh Alai
www.thamizhalai.in