Canada pm Breaks:மறைமுக தாக்குதல்களை நிறுத்துங்கள்!!டிரம்புக்கு கனடா பிரதமர் கார்னி கடும் பதிலடி...

வர்த்தகப் போர் தீவிரமடைந்த நிலையில், சமூக வலைதள கிண்டல்கள் மற்றும் அமெரிக்காவின் கடுமையான அணுகுமுறையை விமர்சித்த கனடா பிரதமர் மார்க் கார்னி, "தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்துங்கள்" என வலியுறுத்தினார்...
canada pm warns america president Trumph for making unwanted posts on social media
canada pm warns america president Trumph for making unwanted posts on social mediaGoogle
1 min read

கேலி விமர்சனங்களை நிறுத்துமாறு வலியுறுத்தல் :

மீம்ஸ்களை உருவாக்குவதையும், மறைமுகமாகத் தாக்குவதையும் நிறுத்துங்கள் என அதிபர் டிரம்புக்கு கனடா பிரதமர் மார்க் கார்னி பதிலடி கொடுத்துள்ளார்.

வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிந்த நிலையில், டிரம்பின் 50% வரி விதிப்பு, ஏரிக்கு பெயர் மாற்றம் மற்றும் பெண் ராணுவப் பயிற்சி அதிகாரிகளை பென்டகன் கேலி செய்ததைத் தொடர்ந்து, கனடா பிரதமர் மார்க் கார்னி, அமெரிக்காவை மீம்ஸ்களையும் மறைமுகமான விமர்சனங்களையும் நிறுத்துமாறு கேட்டுக் கொண்டார்.

பேச்சு வார்த்தைகளில் கவனம் செலுத்த வேண்டும் :

பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா தீவிர கவனம் செலுத்தினால், அமெரிக்க-கனடா வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் துவங்கலாம்.

கனடா தொழில்துறைகள் படிப்படியாகச் சுருங்கி அழிந்துபோகும் வகையிலான நிபந்தனைகளை அமெரிக்கா முன்வைக்கிறது.

நாங்கள் நிச்சயமாக அந்த நிபந்தனைகளை ஏற்கப் போவதில்லை. மீம்ஸ்களை உருவாக்குவதையும், மறைமுகமாகத் தாக்குவதையும் நிறுத்துங்கள்.

மற்ற நாடுகளை குறை கூறுவதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தல் :

மேலும் கடுமையாக நடந்துகொள்ள முயற்சிப்பதையும் நிறுத்த வேண்டும் அதே சமயத்தில் மற்றவர்களைக் குறை கூறுவதை நிறுத்தி, தங்களை வலிமையானவர்களாகக் காட்டிக்கொள்ள முயற்சிப்பதை நிறுத்தினால், மீண்டும் நம்மால் வர்த்தக பேச்சுவார்த்தைகளை நடத்த முடியும். இவ்வாறு மார்க் கார்னி கூறினார்.

சுங்க வரி போர் தீவிரம் :

பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கனடா பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீதம் வரை கூடுதல் சுங்க வரி விதித்தது.

அதற்கு பதிலடியாக கனடாவும் அமெரிக்கப் பொருட்களுக்கு சமமான சுங்க வரிகளை அறிவித்துள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது

கனடாவின் இறையாண்மையில் சமரசம் இல்லை :

அதே சமயத்தில் கனடாவின் முக்கிய தொழில்துறைகள் மற்றும் பொருளாதார சுயாட்சியை பாதிக்கும் எந்த ஒப்பந்தத்தையும் ஏற்க முடியாது என கார்னி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கனடாவின் நலன்களைப் பாதுகாக்கும் வகையிலான நியாயமான ஒப்பந்தம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

==============

logo
Thamizh Alai
www.thamizhalai.in