சந்திரயான்-3க்கு கோடார்ட் விண்வெளி ஆய்வு விருது : அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் வழங்கி கவுரவிப்பு !

2026ம் ஆண்டிற்கான கோடார்ட் விண்வெளி ஆய்வு விருதை இந்தியாவின் சந்திரயான்-3 திட்டத்திற்கு அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் வழங்கியுள்ளது
Chandrayaan-3 honored with Goddard Space Exploration Award by US space agency
Chandrayaan-3 honored with Goddard Space Exploration Award by US space agency google
1 min read

கோடார்ட் விண்வெளி ஆய்வு விருது

2026ம் ஆண்டிற்கான கோடார்ட் விண்வெளி ஆய்வு விருதை இந்தியாவின் சந்திரயான்-3 திட்டத்திற்கு அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் வழங்கியுள்ளது , இந்த விருதை

அமெரிக்காவிற்கான இந்தியத் தூதர் வினய் குவாத்ரா இந்த விருதை பெற்றுக்கொண்டார்.

சந்திரயான்-3 : தென் துருவத்தில் இறங்கி சாதனை

சந்திரயான்-3 என்பது இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் நிலவின் தென் துருவப் பகுதியை ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்ட விண்கலத் திட்டமாகும்.

நிலவின் மேற்பரப்பில் விண்கலத்தை மெதுவாகவும் பாதுகாப்பாகவும் தரையிறக்கும் திறனை நிரூபித்ததன் மூலம், உலக அளவில் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற வரலாற்றுச் சாதனையை இந்தியா படைத்திருந்தது

இது குறித்து பேசிய இந்திய தூதர்

விருது வாங்கிய குறித்து இந்தியத் தூதர் வினய் குவாத்ரா பேசிய போது, பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையையும், விண்வெளி ஆய்வு, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் ஆகியவற்றிற்கான இந்தியா மேற்கொண்டு வரும் நடவடிக்கை குறித்து தெரியப்படுத்தினார்

விண்வெளி துறைக்கு வழங்கப்படும் உயரிய விருது

விண்வெளி ஆய்வில் இந்தியா மற்றும் அமெரிக்கா தொழில்துறைகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு இடையிலான உறவை வலுப்படுத்தவும் அழைப்பு விடுத்த இந்திய தூதர்

கோடார்ட் விண்வெளி ஆய்வு விருது என்பது விண்வெளித் துறையில் மிகச் சிறப்பான சாதனைகளுக்காக அமெரிக்க விண்வெளி நிறுவனன் வழங்கும் உயரிய விருதாகும் என்பது குறிப்பிடதக்கது.

==================

logo
Thamizh Alai
www.thamizhalai.in