China: சீனா கண்டுபிடித்த தங்க படிமம்: 39 லட்ச தங்கத்துடன் முதலிடம்

China Gold Reserves Ranking in Tons 2025 : கிழக்கு சீன கடல் பகுதியில், ஆசியாவின் மிகப்பெரிய கடலுக்கடியிலான தங்க படிமத்தை சீனா கண்டுபிடித்துள்ளது.
China discovers reserves gold deposit ranks first with 3. 9 million tons of gold!
China discovers reserves gold deposit ranks first with 3. 9 million tons of gold!Google
1 min read

இதுவரை சீனாவின் இருப்பு தங்கம்

China Gold Reserves Ranking in Tons 2025 : இந்தியாவின் அண்டை நாடான சீனா, உலகிலேயே அதிகளவு தங்கத்தை உற்பத்தி செய்யும் நாடாக உள்ளது. அதே நேரத்தில் தங்க கையிருப்பில் உலகளவில் ஆப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு அடுத்த இடத்தில் உள்ளது சீனா என்றால் மிகையாகாது.

கடந்த, 2021ல் இருந்து தங்கப் படிமங்களை கண்டுபிடிப்பதில் சீனா தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி, வடகிழக்கு மாகாணமான லியானிங்கில், 14.44 லட்சம் கிலோ தங்க இருப்பு கடந்தாண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தவிர, ஜின்ஜியாங் உய்குர் பிராந்தியத்தில் உள்ள மலையில், 10 லட்சம் கிலோ தங்க இருப்பும் கண்டுபிடிக்கப்பட்டது.

சீனாவின் புதிய தங்கம் கண்டுபிடிப்பு

இந்நிலையில், ஷான்டாங் மாகாணத்தின் யாண்டாய் நகரில் உள்ள லைஜோ கடற்கரைக்கு அப்பால், கடலுக்கு அடியில் ஒரு பிரமாண்டமான தங்க படிமத்தை சீனா கண்டுபிடித்துள்ளது. இது ஆசியாவின் கடலுக்கடியில் உள்ள மிகப்பெரிய தங்க இருப்பு என கூறப்படுகிறது. சமீபத்தில் கண்டறியப்பட்ட இந்த தங்க இருப்பின் வாயிலாக லைஜோவின் ஒட்டுமொத்த தங்க இருப்பு 39 லட்சம் கிலோவுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இது சீனாவின் தேசிய தங்க இருப்பில் தோராயமாக 26 சதவீதமாகும்.

சீனாவின் கண்டுபிடிப்புக்கு மற்ற நாடுகள் வாழ்த்து

இந்த கண்டுபிடிப்பின் வாயிலாக லைஜோ பகுதி, சீனாவின் தங்க இருப்பு மற்றும் தங்க உற்பத்தி ஆகிய இரண்டிலும் முதலிடத்தை பிடித்துள்ள நிலையில், பிற நாடுகளை பிண்ணுக்கு தள்ளி தங்க இருப்பில் சீனா முண்ணனி இடத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. சீனாவின் இந்த புதிய கண்டுபிடிப்புக்கு பல நாடுகள் தங்களின் கருத்துக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in