உலக சாதனையை முறியடித்த எகிப்து மல்யுத்த வீரர்- அவர்தான் இவரா?

உலக சாதனை என்றால் பிற மனிதர்களால் செய்ய முடியாத அதாவது ஒரு செயலை செய்வது. அப்படி தான் செய்த உலக சாதனையை தானே முறியடித்து அசத்தியுள்ளார் எகிப்து நாட்டை சேர்ந்த மல்யுத்த வீரர்.
Is this the Egyptian wrestler who broke the world record?
Is this the Egyptian wrestler who broke the world record?
1 min read

Iஉலகை சாதனை

Is this the Egyptian wrestler who broke the world record? உலக சாதனை செய்வது எவ்வளவு பெரிதோ, அதைப்போல் உலக சாதனை செய்தவர்களை பார்க்கின்ற மனிதர்களும் அவ்வளவு பெரிதாக பார்ப்பார்கள். அதாவது ஒரு மனிதன் செய்ததையோ செய்ய முடியாததையோ அதே மனிதன் தன் திறமையை வெளிக்காட்ட திட்டமிட்டு அதை செய்து சாதித்து காட்டுவது. சிலர் எவராலும் செய்ய முடியாததை மிக எளிதாக செய்து முடிப்பர். இப்படி செய்யும் செயலுக்கு உலக சாதனை என்று அழைக்கப்பட்டுகிறது.

கப்பலை இழுத்து உலக சாதனை

இந்நிலையில், உலக சாதனையை கின்னஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் உள்ளிட்ட சில புத்தகங்களில் பதிவு செய்வதுண்டு. இப்படி இருக்கையில், யாராலும் நினைத்து கூட பார்க்க முடியாத, மூக்கில் விரல் வைக்கும் அளவிற்கு 700 டன் எடையுள்ள கப்பலை பற்களால் கயிறை கடித்தபடி இழுத்து, எகிப்தை சேர்ந்த மல்யுத்த வீரர் உலக சாதனை படைத்துள்ளார்.

புதிய சாதனைக்கு தயாரான மல்யுத்த வீரர்

எகிப்து நாட்டைச் சேர்ந்த மல்யுத்த வீரர் அஷ்ரஃப் மக்ரூஸ், இவர் தனது பற்களால் லாரி, ரயில், கப்பல் உள்ளிட்டவை இழுத்து சாதனை படைப்பது வழக்கம். இந்நிலையில், மக்ரூஸ் கடந்த 2018-ம் ஆண்டில் 614 டன் கப்பலை இழுத்து சாதனை படைத்த நிலையில், அதனை முறியடிக்கும் வகையில் புதிய சவாலுக்குத் தயாரானார்.

அவரது சாதனையை அவரே முறியடித்தார்

அதன்படி எகிப்தின் செங்கடல் பகுதியில் உள்ள ஹுர்கடா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 700 டன் எடையுள்ள கப்பலை, கயிற்றின் உதவியுடன் தனது பற்களால் 15 மீட்டர் தூரத்திற்கு இழுத்து உலக சாதனை படைத்தார்.இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா என்று நினைத்தாலும் இதுவும் நாம் வாழும் பிரபஞ்சத்தில் ஒரு மூலையில் நடந்து கொண்டிருக்கிறது என்பதே ஒரு நிதர்சனமான உண்மை. எனவே பிறந்தோம் இறந்தோம் என்று இருந்து விடமால், முட்டி மோதி மூச்சு நிற்பதுக்கு முன் முயற்சி செய்து எதிலாவது உங்கள் திறமையை நிலைநாட்டி சாதனை புரியுங்கள்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in