முன்னாள் காதலியை பிளாக் செய்த எலான் மஸ்க்-கிரீம்ஸ் வலியுறுத்தல்!

Elon Musk Blocked His Ex-Girlfriend Grimes : எக்ஸில் எலான் மஸ்க் தன்னை பிளாக் செய்து விட்டார் என அவரது முன்னாள் காதலியும், இசைக்கலைஞருமான கிரீம்ஸ் தெரிவித்துள்ளார்.
Elon Musk blocked his ex-girlfriend in X. Com Grimes insistence
Elon Musk blocked his ex-girlfriend in X. Com Grimes insistenceGoogle
1 min read

எலான் மஸ்க் பின்புலம்

Elon Musk Blocked His Ex-Girlfriend Grimes : எலான் மஸ்க் டுவிட்டரை வாங்கி அதற்கு எக்ஸ் என பெயர் வைத்தவர். உலக பணக்காரர், ஸ்பேஸ் எக்ஸின் உரிமையாளர், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை அதிகாரி என இன்னும் பல பிண்புலங்கள் என சொல்லிக்கொண்டே போகலாம். உலகளவில் பெயர் போன இவர் அவ்வப்போது சில சிக்கல்களை உருவாக்கியும், சில சிக்களில் சிக்கியும் அதற்கு சமூக வலைதளம் மற்றும் நேரிலும் என அதற்கு பதில் கூறி விமர்சித்து வருவார்.

எலான் மஸ்க் முன்னாள் காதலி கிரீம்ஸ் பிரிவு

இந்நிலையில், தற்போது எலான் மஸ்க் எக்ஸ் தளத்தில் தன்னை முடக்கிவிட்டதாக அவரது முன்னாள் காதலியான கிரீம்ஸ் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க்கும், இசைக்கலைஞர் கிரீம்ஸும் காதலித்து வந்த நிலையில், இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்த இவர்கள், குழந்தைகளை யார் பராமரிப்பது என்பது தொடர்பாகக் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் முதல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பரபரப்பு தகவலை வெளியிட்ட எலான் மஸ்கின் முன்னாள் காதலி கிரீம்ஸ்

ஆனால் தற்போது இசைக்கலைஞரும், எலான் மஸ்கின் முன்னாள் காதலியுமான கிரீம்ஸ் சில பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது, எலான் மஸ்க் தனது மூத்த மகனைத் தனக்குத் தெரியாமல் அமெரிக்க அதிபர் மாளிகைக்கு அழைத்துச் சென்றது மற்றும் குழந்தைகளின் புகைப்படங்களை வெளியிடுவது தனக்கு பிடிக்கவில்லை என்று தெரிவித்தார். மேலும், ‘தனது குழந்தைகளின் தனியுரிமை பாதுகாக்கப்பட வேண்டும்; அவர்களை இணைய உலகிலிருந்து விலக்கி வைக்க வேண்டும்’ என்றும் வலியுறுத்தி வந்தார்.

தனது முன்னாள் காதலியை எக்ஸில் முடக்கிய எலான் மஸ்க்

இந்நிலையில், எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் தன்னை பின்தொடர்வதை நிறுத்திவிட்டு, ‘பிளாக்’ செய்துவிட்டதாக கிரீம்ஸ் தற்போது தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தள பயனர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, ‘அவர் என்னைப் பின்தொடர்ந்தார், பின்னர் முடக்கிவிட்டார்; பொதுவெளியில் நாடகமாடுவதில் எனக்கு விருப்பமில்லை’ என்று பதிலளித்துள்ளார். மேலும், குழந்தைகளுக்கான உரிமைப் போராட்டம் தீவிரமடைந்துள்ள சூழலில், எலான் மஸ்க் தனது முன்னாள் காதலியை சமூக வலைத்தளத்தில் முடக்கிய விவகாரம் இணையத்தில் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in