

புளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கன் 9 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது.
மோசமான வானிலை, சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, 6 முறை ஏவுதல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது ஃபால்கன் 9 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
இந்த விண்வெளி பயணத்தில் இந்தியாவின் சுபான்ஷூ சுக்லா, அமெரிக்கா,போலந்து மற்றும் ஹங்கேரி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
41 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளி சென்ற இந்தியர் என்ற சாதனையை சுபான்ஷூ சுக்லா படைத்துள்ளார்.
28 மணி நேர பயணத்திற்குப் பிறகு சர்வதேச விண்வெளி நிலையத்தை விண்கலம் சென்றடையும்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் விண்வெளி வீரர்கள் நான்கு பேரும் 14 நாட்கள் தங்குவார்கள்.
இந்த பயணத்தின் போது 60 விதமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
மேலும் இந்த பயணம் மிகவும் முக்கியமான பயணமாக கருதப்படுவதாகவும் நாசா தெரிவித்துள்ளது.
----