உலக மகிழ்ச்சி நாடுகளின் பட்டியலில் மீண்டும் முதலிடத்தில் பின்லாந்து!

Happiest Country in the World 2026 : ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் நல்வாழ்வு ஆராய்ச்சி மையம் வெளியிட்ட 2026ம் ஆண்டில் உலகில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பெற்றது பின்லாந்து.
Finland tops the list of the happiest countries in the world 2026 again
Finland tops the list of the happiest countries in the world 2026 againgoogle
1 min read

மீண்டும் முதலிடத்தில் பின்லாந்து

Finland the Happiest Country in the World 2026 : ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் நல்வாழ்வு ஆராய்ச்சி மையம் வெளியிட்ட 2026ம் ஆண்டில் உலகில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் 9 வது முறையாக மீண்டும் முதலிடத்தை பெற்றது பின்லாந்து நாடு.

உலகின் 147 நாடுகளில் மக்கள் கருத்து

சர்வதேச மகிழ்ச்சி தினம் முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் இந்த பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது . இதற்கென உலகின் 147 நாடுகளில் மக்கள் வாழ்க்கைத்தரம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

சமூக ஆதரவு, சுதந்திரம்,, ஊழல் குறித்த மக்கள் எண்ணம், மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆகியவை குறித்தான தகவல் இந்த ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.

வெளியான டாப் 25 மகிழ்ச்சியான நாடுகள்

மீண்டும் முதலிடத்தை பெற்றுள்ளது பின்லாந்து நாட்டு அதற்கு அடுத்த இடத்தில ஐஸ்லாந்து,டென்மார்க், கோஸ்டாரிகா.சுவீடன்,நார்வே,நெதர்லாந்து ,மேலும் பல நாடுகள் இடம் பெற்றுள்ளன

116வது இடத்தில் இந்தியா

இதில், அதிகபட்ச புள்ளிகள் 10 என்றால், முதலிடம் பெற்ற நாடான பின்லாந்து 7.76 புள்ளிகளுடன் உலகின் மகிழ்ச்சியான நாடு என்ற தகுதியை பெற்றது.. பட்டியலில் இந்தியா 116வது இடத்தை பிடித்துள்ளது .

கடந்த 2025ம் ஆண்டில் 118வது இடத்தில் இருந்த நிலையில் நடப்பாண்டு இரண்டு இடங்கள் இந்தியா முன்னேறி இருப்பது குறிப்பிடத்தக்கது

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in