

பெண்களை கௌரவிக்கும் இந்தியா
Forbes Most Powerful Women 2025 List : பொதுவாக தமிழகம் மட்டுமல்லாது, இந்தியா மற்றும் உலகளவில் பெண்களை ஊக்கபடுத்தும் விதமாக பல்வேறு போட்டிகள் பரிசுகள் வழங்கப்படும்.
முன்னேற்றம் காணும் பெண்கள்
தற்போது அனைத்து துறைகளிலும் பெண்கள் சிறப்பாக பணியாற்றி, தங்களை முன்னிறுத்தி அவரவர் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி வருகின்றனர்.
இந்நிலையில், இவர்களை கௌரவப்படுத்தும் விதமாக மிகச்சிறந்த பெண் ஆளுமைகளை தேர்ந்தெடுத்து பல தனியார் நிறுவனங்கள் அவர்களை கௌரவித்து, பரிசுகள், பரிசுத்தொகை சான்றிதழ் ஆகியவற்றை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.
சக்தி வாய்ந்த பெண்கள் - போர்ப்ஸ் கணிப்பு
அதன்படி, தற்போது போர்ப்ஸ் எனும் அமெரிக்க பத்திரிக்கை நிறுவனம் உலகின் சக்திவாய்ந்த பெண்கள் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது.
24 வது இடத்தை பிடித்தார் நிர்மலா சீதாராமன்
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தை தலைமையிடமாக வைத்து செயல்படும் போர்ப்ஸ் பத்திரிகை, உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 2025க்கான பட்டியலை அந்த பத்திரிகை வெளியிட்டுள்ளது.
முதலிடத்தில் ஐரோப்பிய ஆணையத் தலைவர்
அதில், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் முதலிடம் பிடித்துள்ளார். ஐரோப்பிய ஆணையத்தின் தலைவராகப் பொறுப்பு வகிக்கும் முதல் பெண் இவர்.
இவரைத் தொடர்ந்து, இந்த பட்டியலில், பாஜக மூத்த தலைவரும், மத்திய நிதி அமைச்சருமான நிர்மலா சீதாராமன், 24வது இடத்தில் உள்ளார். நாட்டின் பொருளாதாரக் கொள்கையை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றியதற்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
ரோஷிணி நாடார்
இவர்களைப்போல் இந்தியாவில் இருந்து இந்த பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெண்களில் எச்.சி.எல்., நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரோஷிணி நாடார் மல்ஹோத்ரா, 76வது இடத்தில் உள்ளார்.
நாட்டின் பணக்கார பெண் தொழிலதிபர்களில் ஒருவரான இவர், தமிழகத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஷிவ் நாடாரின் ஒரே மகள் ஆவார்.
கிரண் மஜூம்தார் ஷா
கர்நாடகாவைச் சேர்ந்த 'பயோகான்' நிறுவனத் தலைவர் கிரண் மஜும்தார் ஷா, 83வது இடத்தில் உள்ளார். இந்தியாவில் இருந்து அமெரிக்க நிறுவுனம் வெளியிட்டுள்ள பட்டியலில் இடம்பிடித்துள்ள இந்த இரும்பு பெண்மணிகளுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.