
இஸ்ரேல்-ஹமாஸ் போர் முடிவு
Former US President Bill Clinton Praises Donald Trump : அமெரிக்க அதிபர் டிரம்ப் பரிந்துரை செய்த 20 அம்ச திட்டத்தை ஒப்புக் கொண்டு, இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டு உள்ளது. எகிப்தில் இது தொடர்பாக நடைபெற்ற அமைதிக்கான உச்சி மாநாட்டில், போர் ஒப்பந்தம் கையெழுத்தானது. டிரம்பின் இந்த முயற்சியை உலக நாடுகளின் பல்வேறு தலைவர்கள் வரவேற்று உள்ளனர்.
டிரம்பின் நோபல் மற்றும் வரி விதிப்பு
இதன் தொடர்ச்சியாக, டிரம்ப்பின் அறிவிப்பு உலக நாடுகளின் பொருளாதாரத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் இந்திய பொருள்களுக்கு 50 சதவிகித வரி விதித்துள்ளார். இதனால், அமெரிக்க டாலாருக்கு எதிரான இந்திய நாணயத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டு, தங்க நகைகள் விலை ஏரி, ஏற்றுமதி இறக்குமதி பொருள்கள் வரி அதிகரிக்கப்பட்டு, பெரும் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது.
டிரம்பின் நோபல் முயற்சி
மேலும், டிரம்பின் இந்த முடிவுகளுடன், அவர் 8 போர்களை நிறுத்தியதாக சமீப காலமாக பல இடங்களில் முன்னுரைத்து, தனக்கு அமைதிக்கான நோபல் பரிசை அவரே பரிந்துரைத்து வந்தார். ஆனால், பல வித காரங்களால் அந்த பரிசு வெனிசுலாவை சேர்ந்த மச்சாடோவுக்கு வழங்கப்பட்டது. இதற்கு எனக்கு வேண்டும் நீங்கள் வைத்து கொள்ளுங்கள் என்று மச்சாடோவுக்கு, தனது வாழ்த்தையும் டிரம்ப் தெரிவித்தார்.
உச்சி மாநாடு
இதற்கிடையில் எகிப்தில் இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தத்திற்கான உச்சி மாநாடு டிரம்ப் தலைமையில் நடைபெற்றது. இதில் போர் ஒப்பந்தம் கையெழுத்தனாது. இந்நிலையில், உச்சி மாநாட்டு நிகழ்வின் போது, ஒப்பந்தங்களில் இடம்பெற்றுள்ள ஷரத்துகள் பற்றிய முழு விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
பாகிஸ்தான் பிரதமர் முன் பிரதமர் மோடிக்கு பாராட்டு
இந்த உச்சி மாநாட்டில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், பாகிஸ்தான் அதிபர் ஷெபாஸ் ஷெரிப் முன்னிலையில் இந்தியா மிகவும் சிறந்த நாடு. என் நல்ல நண்பர்கள் என்ற பட்டியலில் உச்சத்தில் இருப்பவர் பிரதமர் மோடி என்று பிரதமர் மோடியையும், இந்தியாவையும் பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிபர் பில் கிளிண்டன் பாராட்டு
இதைத்தொடர்ந்து அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் இந்த போர் நிறுத்தத்தை வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் தமது எக்ஸ் வலைதள பதிவில் கூறி உள்ளதாவது; அக்.7ம் தேதி 2023 முதல் இஸ்ரேல் மீதான தாக்குதல் தாங்க முடியாத இழப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. இதை பார்ப்பதற்கும், அது பற்றி பேசுவதற்கும் மனது மிகவும் கடினமாக உள்ளது.
அனைத்து தலைவர்களுக்கும் பாராட்டு
போர் நிறுத்தம் நடைமுறை, 20 பிணைக்கைதிகள் விடுவிப்பு, காசாவுக்கான உதவிகள் போன்ற நடவடிக்கைகளுக்கு நன்றி. அனைவரையும் ஈடுபாட்டுடன் வைத்திருந்த அதிபர் டிரம்ப், கத்தார் மற்றும் பிறநாட்டு தலைவர்கள் பாராட்டுக்களுக்கு தகுதியானவர்கள்.
எதிர்காலத்தை யோசித்து, அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அமெரிக்கா மற்றும் மற்ற நாடுகளின் ஆதரவுடன் பாலஸ்தீனியர்கள், இஸ்ரேல் மக்கள் கண்ணியம், பாதுகாப்பு ஆகியவற்றை வழங்கும் வகையில் நீடித்த அமைதிக்கான முயற்சியாக மாற்ற வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க : இஸ்ரேல் - ஹமாஸ் அமைதி ஒப்பந்தம் : கையெழுத்திட்ட டிரம்ப் பெருமிதம்
பில் கிளிண்டன் குறித்து டிரம்ப்
எகிப்து பயணத்தை(Egypt Peace Summit 2025) முடித்துக் கொண்டு வாஷிங்டன் திரும்பும் போது விமானத்தில் ஏறிய டிரம்பிடம், பில் கிளிண்டனின் வரவேற்பை நிருபர்கள் சுட்டிக்காட்டினர். அதற்கு பதிலளித்த டிரம்ப், இது மிகவும் சிறந்த ஒன்று. அவர் உண்மையைத்தானே சொல்லி இருக்கிறார். அவருடன்(பில் கிளிண்டன்) நான் நன்றாக பழகியிருக்கிறேன். என் நண்பர். எனது திருமணத்திற்கு வந்திருக்கிறார் என்று கூறியுள்ளார்.