

பிரான்ஸ் அரசு முக்கிய முடிவு :
15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க பிரான்ஸ் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
குழந்தைகளின் மனநலம் மற்றும் இணைய பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TikTok, Instagram, Snapchat, X உள்ளிட்ட சமூக ஊடக தளங்களில் சிறுவர்கள் அதிக நேரம் செலவிடுவதால் மனநல பாதிப்புகள், இணையத் தொல்லைகள் மற்றும் ஆபத்தான உள்ளடக்கங்களின் தாக்கம் அதிகரித்து வருவதாக பிரான்ஸ் அரசு கவலை தெரிவித்துள்ளது.
புதிய விதிகளின்படி 15 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடக கணக்குகளை உருவாக்குவதற்கு பெற்றோர் அனுமதி மற்றும் வயது சரிபார்ப்பு நடைமுறைகள் கட்டாயமாக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆய்வுகளின்படி அதிக நேரம் சமூக ஊடகங்களில் செலவிடும் குழந்தைகளுக்கு:
தூக்கக் குறைபாடு ,மன அழுத்தம் , கவனச் சிதறல் ,இணையத் தொல்லைகள் போன்ற பிரச்சினைகள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியா உள்ளிட்ட சில நாடுகளும் சிறுவர்களின் சமூக ஊடக பயன்பாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை பரிசீலித்து வருகின்றன.
இதனால் பிரான்ஸ் எடுத்துள்ள இந்த முடிவு உலகளவில் முக்கிய கவனம் பெற்றுள்ளது.
வயது சரிபார்ப்பு முறைகளை வலுப்படுத்த வேண்டும் என்ற அழுத்தம் சமூக ஊடக நிறுவனங்கள் மீது அதிகரித்துள்ளது.
இதனால் எதிர்காலத்தில் உலகம் முழுவதும் சமூக ஊடக பயன்பாட்டில் புதிய விதிமுறைகள் அமலுக்கு வர வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
================