AI பயன்பாடு : "வளர்ச்சி மற்றும் உபயோகத்திற்கு எச்சரிக்கை, தவறுகளுக்கு பொறுப்பேற்காது" : கூகுள் CEO சுந்தர் பிச்சை

AI ஒரு அசுர வளார்ச்சி என்றாலும் அதில் உண்மைத்தன்மை இல்லை என கூகுள் CEO சுந்தர் பிச்சை சமீபத்திஒல் பேசியுள்ளது தற்போது பேசியுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது
Google CEO Sundar Pichai warns of increasing use of AI,
Google CEO Sundar Pichai warns of increasing use of AI, google
1 min read

AI பயன்பாடு மற்றும் வளர்ச்சி ஆபத்தானது , சுந்தர் பிச்சை எச்சரிக்கை

கூகுள் மற்றும் ஆல்பாபெட் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை, தற்போது உரையாடிய நேர்காணலில் , செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சிம் பயன்பாடு குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.

BBC-க்கு அளித்த நேர்காணல்

AI ஒரு அபரிதமான வளர்ச்சி என்றாலும், அதை கண்மூடித்தனமாக , அப்படியே நம்ப வேண்டாம். தற்போது AI-யில் சில பகுத்தறிவற்ற தன்மைகள் உள்ளன.

அது எந்த தவறுகளுக்கு பொறுப்பேற்காது , பொறுப்பேற்கவும் முடியாது ,அதை ஒரே தகவல் மூலமாகப் பயன்படுத்துவது ஆபத்தானது என்றும் அவர் வலியுறுத்தினார்.

மாற்று தேடல்களுக்கு கூகுள் தேடல் போன்றவற்றை பயன்படுத்தலாம்

ஏஐ ஒரு சிறந்த உருவாக்கம் என்றாலும் முரண்கள் ஏராளமாக இருகின்றன , துல்லியமான தகவல்களுக்கு கூகுள் தேடல் போன்ற பிற கருவிகளை நீங்கள் பயன்ப்டுத்திக் கொள்ளுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக கூகுளின் AI மோட் (AI Mode) போன்ற கருவிகள் இன்னும் முழுமையடையவில்லை என்றும், பயனர்கள் AI-யை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும் எனவும் குறிபிட்டுள்ளார்

AI-யின் தவறுகள் (hallucinations) போன்ற பிரச்சினைகள், தவறான தகவல்களை உருவாக்கி பரப்பலாம் என்றும் எச்சரிகை விடுத்துள்ளார்

கவனம் பெறும் சுந்தர் பிச்சையின் எச்சரிகை

உலகளவில் ஏஐயின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் சுந்தர் பிச்சையின் இந்த எச்சரிக்கை கவுனம் பெற்றுள்ளது .இது குறித்து தொடர்ந்து பேசிய அவர் AI-யின் தேவை குறைந்தால் ஒவ்வொரு நிறுவனமும் பாதிக்கப்படும் என்றும், ஆனால் அதை கட்டுப்படுத்தாமல் வளர்த்தால் ஆபத்துகள் ஏற்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.

தவறுகளை அறிந்து பயன்படுத்த வேண்டும்

கூகுள் போன்ற நிறுவனங்கள் AI-யை மேம்படுத்தி வந்து கொண்டிருக்கும் நிலையிலும் பயனர்கள் பல்வேறு மூலங்களைச் சரிபார்த்து பயன்படுத்த வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். இந்த கருத்துகள், AI-யின் பொறுப்பான வளர்ச்சிக்கு வழிகாட்டும் என்று அவர் குறிப்பிட்டு பேசினார்.

======================

logo
Thamizh Alai
www.thamizhalai.in