

கூகுளின் எமர்ஜென்சி சர்வீஸ்
Google launches Android Emergency Location Service in India : இந்தியாவில் ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கு எமர்ஜென்சி லொகேஷன் சர்வீஸ் (Emergency Location Service - ELS)அம்சத்தை கூகுள் அறிமுகம் செய்துள்ளது.
அவசர காலத்தில் தொடர்பு கொள்ளலாம்
இதன் மூலமாக ஏதாவது அவசர காலத்தின் போது யூசர்களால் அவசரகால சேவை வழங்குனர்களுக்கு போன் கால் அல்லது டெக்ஸ்ட் மெசேஜ் செய்ய முடியும்.
இதில் காவல்துறை, சுகாதார பராமரிப்பு நிபுணர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் போன்றவர்களை உங்களால் தொடர்பு கொள்ள முடியும் என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
எமர்ஜென்சி லொகேஷன் சர்வீஸ் முறை
இந்த அம்சத்தை நீங்கள் பயன்படுத்திய உடனே உங்களுடைய லொகேஷன் அவர்களுக்கு பகிரப்படும். ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கான ELS(Google Android Emergency Location Service in India) முதன்முதலாக இந்தியாவில் உள்ள உத்தர பிரதேச மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 6 மற்றும் புதிய வெர்ஷன்கள் மூலமாக இயங்கும் சாதனங்களில் இந்த அம்சத்தை பயன்படுத்தலாம்.
எனினும் இந்த சேவைகளை ஆக்டிவேட் செய்வதற்கு அந்தந்த மாநில அதிகாரிகளின் ஒப்புதல் தேவைப்படுகிறது என்று சொல்லப்படுகிறது.
கூகுளின் இஎல்எஸ் சேவை
இந்தியாவில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் கூகுள் ELS அம்சத்தை ஆக்டிவேட் செய்துள்ளது. இது ஒரு பில்ட்-இன் எமர்ஜென்சி சர்வீஸ் ஆகும். இதன் மூலமாக காவல்துறை, மருத்துவர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் போன்ற அவசர கால சேவை வழங்குனர்களிடம் போன் கால் அல்லது SMS மூலமாக தொடர்பு கொண்டு, யூசர்களுடைய லொகேஷன் பகிர்ந்து கொள்ள முடியும்.
சாதனத்தின் GPS, Wi-Fi மற்றும் செல்லுலார் நெட்வொர்க் மூலமாக யூசருடைய லொகேஷன் டிராக் செய்யப்பட்டு, அவசரகால சேவை வழங்குனர்களிடம் பகிர்ந்து கொள்ளப்படும் என்பதை கூகுள் கூறியுள்ளது. 50 மீட்டர் வரையிலான துல்லியத்தன்மை இதன் மூலமாக பெறப்படும் என்பதையும் கூகுள் உறுதி செய்துள்ளது.
112 டயல் செய்தால் டிராக் செய்யப்படும்
எனினும் ELS அம்சத்தை ஆக்டிவேட் செய்வதற்கு லோக்கல் வயர்லெஸ் மற்றும் எமர்ஜென்சி இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஆப்பரேட்டர்கள் தேவைப்படுவதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் உத்தர பிரதேச மாநிலத்தில் இது முழுமையாக செயல்பாட்டிற்கு வந்துள்ளது. மாநில காவல்துறை பெர்ட் டெலிகாம் சொல்யூஷன்ஸ் உடன் இணைந்து 112 என்ற எமர்ஜென்சி நம்பர் மூலமாக ஒருங்கிணைத்துள்ளது.
இது ஒரு இலவச சேவை ஆகும். தங்களுடைய ஆண்ட்ராய்டு போனிலிருந்து 112 என்ற எண்ணை டயல் செய்த உடனேயே யூசருடைய லொகேஷன் டிராக் செய்யப்படும்.
Google எமர்ஜென்சி லைவ் வீடியோ
இந்த அம்சம் அவசரகால சேவை வழங்குனர்களுக்கு மட்டுமே கிடைப்பதாகவும், இதன் மூலமாக கூகுள் எந்தவிதமான தரவுகளையும் சேகரிக்கவில்லை என்பதையும் உறுதி செய்துள்ளது.
லொகேஷன் சம்பந்தப்பட்ட தரவுகள் நேரடியாக தகுந்த அதிகாரிகளுக்கு அனுப்பப்படும் கூகுள் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Google சமீபத்தில் ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கு எமர்ஜென்சி லைவ் வீடியோ அம்சத்தை அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
போன் கால், எஸ்எம்எஸ் மூலம் தகவல்
இந்த அம்சத்தை பயன்படுத்தி யூசர்கள் போன் கால் அல்லது SMS மூலமாக அவசரகால சூழ்நிலையின் போது தங்களுடைய போனில் உள்ள கேமராக்களை ஷேர் செய்ய முடியும். எனினும் கேமராவிற்கான அணுகலை பெறுவதற்கு அவசரகால சேவை வழங்குனர் யூசர்களுடைய அனுமதியை பெறுவது அவசியம்.
இதற்கான பிராம்ட் ஸ்கிரீனில் டிஸ்ப்ளே செய்யப்படும். யூசர் சிங்கிள் டேப் செய்து, அதை ஏற்பதன் மூலமாக வீடியோ மறுபுறத்தில் இருப்பவருக்கு ஷேர் செய்யப்படும்.
இதைத்தொடர்ந்து, கூகுளின் இந்த புதிய அப்டேட் உபயோகத்திற்கு பிறகே, பயனர்களின் நிறை குறை எப்படி இருக்கிறது என்பதை பொருத்திறுந்துபார்க்க வேண்டும்.