மோடியால் கிடைத்த கின்னஸ் சாதனை! 1.11 கோடி பேர் போஸ்ட் கார்டு!

Guinness World Record for Most Postcards To PM Narendra Modi : ஒரே நேரத்தில் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து ஒரு கோடிகளுக்கு மேல் குவிந்த அஞ்சல் அட்டை, கின்னஸ் சாதனை இடம்பிடித்து அசத்தல்.
Guinness World Record for Most Postcards To PM Narendra Modi
Guinness World Record for Most Postcards To PM Narendra Modi
1 min read

கின்னஸ் சாதனை

Guinness World Record for Most Postcards To PM Narendra Modi : பொதுவாக கின்னஸ் சாதனை என்பது யாராலும் நிகழ்த்த முடியாத, இதுவரை ஒரு புது வித செயல்களை செய்தவர்களை முறியடித்து அதை தாண்டி செய்து சாதனை படைப்பர். அப்படி இருப்பதை வீடியோவாக பதிவு செய்தோ அல்லது நேரடியாக செய்து காட்டியோ கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவர். அதிலும் சில நேரங்களில் நாம் நம்பமுடியாத அளவிற்கு கின்னஸ் நிகழ்வு நடக்கும்.

மோடியால் கிடைத்த கின்னஸ் சாதனை

அதன்படி, குஜராத்தில் 1.11 கோடி பேர் நன்றி தெரிவித்து மோடிக்கு போஸ்ட் கார்டு அனுப்பியது புதிய கின்னஸ் சாதனையாக படைக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி சீர்திருத்தம் செய்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து குஜராத் மாநில வேளாண்மை, விவசாயிகள் நலன் மற்றும் கூட்டுறவுத் துறை சார்பில் அஞ்சல் அட்டை கடந்த 14ஆம் தேதி எழுதப்பட்டது. இதற்காக 75 லட்சம் அஞ்சல் அட்டை என்று மதிப்பிடப்பட்டது. ஆனால் 1,11,75,000 அஞ்சல் அட்டைகள் எழுதி அனுப்பப்பட்டது.

ஒரே நேரத்தில் கோடிகளில் அஞ்சல் அட்டை

உலகில் முதல் முறையாக இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான அஞ்சல் அட்டைகள் ஒரே நேரத்தில் எழுதப்பட்டன. இதையடுத்து நேற்று சபர்மதி ஆற்றங்கரையில் போஸ்ட் கார்டுகளை எண்ணிய பிறகு கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. இதற்கு முன்பு கின்னஸ் உலக சாதனைகளின்படி, முந்தைய சாதனையான சுவிஸ் வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பு நிறுவனம் ஒரே நேரத்தில் 6,666 அஞ்சல் அட்டை எழுதியிருந்தது தான் சாதனையாக உள்ளது.ஆனால், அதனை முறியடித்து மோடிக்கு நன்றி என்ற அஞ்சல் அட்டை கோடிகளில் எழுதப்பட்டு சாதனை படைத்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in