
கிரெடிட் கார்டு :
Manish Dhameja Wins Guinness World Record for Most Credit Cards : கிரெடிட் கார்டு என்றாலே, மகிழ்ச்சியை தாண்டி அனைவருக்கும் அச்சம் வந்து விடும். ஏனென்றால் கிரெடிட் கார்டில் நமக்கு வழங்கப்பட்டுள்ள குறிப்பிட்ட பணத்தில் இருந்து தனக்கு தேவையான பணத்தை உபயோகப்படுத்தி விட்டு, நாம் உபயோகப்படுத்திய காலத்தில் இருந்து ஒரு மாத காலத்திற்குள் திருப்பி செலுத்தி அந்த கிரெடிட் கார்டு அட்டை உபயோகப்படுத்துவர், இதில் பணத்தை திருப்பி செலுத்த தவறுவோரால், அவர்கள் கால அவகாசத்தை தாண்டியவுடன் வட்டியுடன் கட்ட வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவர்.
கிரெடிட் கார்டு குறித்த அச்சம்
எனவே, கிரெட் கார்டை தெளிவாக உபயோகப்படுத்துவோரை தாண்டி, வட்டி மற்றும் கடன் சூழலில் சிக்கியவர்கள் தான் அதிகம், அதனால் இன்றை காலகட்டத்தில் அவரவர் அலைபேசிக்கு தொடர்பு கொண்டு கிரெடிட் கார்டு தருகிறேன் என்றாலும், தலைதெறிக்க ஓடுவோர் ஏராளம், இதனாலே கிரெடிட் கார்டு என்றால் அச்சம், உச்சத்திற்கு போய்விடும்.
கிரெடிட் கார்டு வாங்கி கின்னஸ் சாதனை
இந்நிலையில், முடிந்தால் என்னை கடனில் சிக்க வையுங்கள் என்று வங்கிகளுக்கு சவால் விடும் வகையில் ஹைதராபாத்தை சேர்ந்த மணிஷ் தாமேஜா என்கிற ஒருவர் கிரெடிட் கார்டுகளை கணக்கில்லாமல் வாங்கி சாதனை படைத்துள்ளார். இவர் 1638 கிரெடிட் கார்டுகளை வாங்கி, அதன் பயணச் சலுகைகள், கேஷ் பேக், ஹோட்டல் சலுகைகள் உள்ளிட்டவைகளுக்கு மிகவும் சாமர்த்தியமாக உபயோகப்படுத்தியுள்ளார்.
மேலும் படிக்க : உச்சம் தொட்ட தங்க நகைக் கடன்கள் : கிரெடிட் கார்டு கடன்கள் சரிவு
கடனில் சிக்காத தந்திரம்
இத்தனை கார்டுகளை எப்படி இவர், தெளிவுபட உபயோகப்படுத்துகிறார் என்று அனைவரும் ஆச்சரியப்படும் நிலையில், இவரின் கார்டு எண்ணிக்கை அப்படி இருந்துருக்கிறது. கிரெடிட் கார்டுகளை பார்த்து மற்றவர் பயமுறும் காலத்தில், அதை சவாலாக சந்தித்து, தனக்கானதாக மாற்றி கையாண்டுள்ளார். இவரின் இந்த நுண்ணிய திறமையை பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் கின்னஸ் சாதனையும் படைத்துள்ளார். கிரெடிட் கார்டு உபயோகப்படுத்துவதின் திறமை இதுதான் என்று அனைவரையும் சிந்திக்க வைக்கும் மணிஷ், அனைவரின் அச்சத்தையும் உடைத்து, தெளிவுபடுத்தியுள்ளார்.