Chrysalis : ஒரு முறை பயணம், நோ ரிட்டன் - 400 ஆண்டு விண்கல பயணம்!

Alpha Chrysalis Spaceship Project Of 400 Year Journey : பூமியை தாண்டி வேறொரு இடத்தில் வாழ்ந்து மறையப் போகும் மனிதன், விஞ்ஞானிகளின் புதிய விண்கல கண்டுபிடிப்பு.
Hyperion Chrysalis Spaceship Generational Star Ship Designed To Take 2 400 Humans On 400 Year Trip To Alpha Centauri Journey Detail In Tamil
Hyperion Chrysalis Spaceship Generational Star Ship Designed To Take 2 400 Humans On 400 Year Trip To Alpha Centauri Journey Detail In TamilNASA - Hyperion Chrysalis Spaceship Image
2 min read

விண்வெளி பயணம்

Alpha Chrysalis Spaceship Project Of 400 Year Journey : மனிதகுலம் பூமியிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால், முதலில் நினைவுக்கு வருவது செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் சின்னஞ்சிறிய, அதிவேக ராக்கெட்டுகள்தான்.அதிலும் பூமியில் இருந்து வேற்று கிரகம், வேறு கோள்கள் என்றால் அது விண்வெளி பயணம் தான்.

விஞ்ஞானிகளின் புது முயற்சி

ஆனால், விஞ்ஞானிகள் எப்பொழுதும் விண்கலத்தில் மட்டும் அல்ல, விண்வெளி செல்வதற்கு புது வித முயற்சிகளை மேற்கொள்வர். அப்படி தற்பொழுது ஒரு சவாலான புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ளனர். அது மிகப்பெரியது, மிக மெதுவாகப் பயணிப்பது, மேலும் ஒருமுறை கிளம்பினால் திரும்பவே வராது. அதுதான் 'கிறிசாலிஸ்' (Chrysalis). இது 2.4 பில்லியன் டன் எடையுள்ள, மன்ஹாடன் தீவை விட நீளமான அடுத்த 'ஜெனரேஷன் விண்கலம்' (Generation Ship). இது விண்வெளி வீரர்களை ஏற்றிச் செல்ல அல்ல, மாறாக ஒரு நகரத்தையே சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார்கள்.

பயணத்தை முடிக்க 400 ஆண்டுகள் ஆகும்

பூமிக்கு மிக அருகில் இருக்கும் நட்சத்திரமான புரோக்சிமா செண்டாரி பி (Proxima Centauri B). இது 4.2 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இந்த பயணத்தை முடிக்கக் கிட்டத்தட்ட 400 ஆண்டுகள் ஆகும். சுமார் 1,000 மனிதர்கள் செல்லலாம். இவர்கள் விண்கலத்திிலேயே பிறந்து, வளர்ந்து, இறந்து போவார்கள். இதில் பிறந்தவர்கள் யாரும் பூமியைப் பார்க்கவே மாட்டார்கள் என்பது வியப்பும், அதிர்ச்சியும் கொடுக்கும் செய்தி.

கிறிசாலிஸ் ஈர்ப்புவிசை

இந்நிலையில், இவ்வளவு பெரிய விண்கலம் மெதுவாகச் சுழலும் போது, உள்ளே வசிப்பவர்களுக்கு எந்தவிதமான உடல்நலக் குறைவும் ஏற்படாமல் இருக்க, செயற்கை ஈர்ப்புவிசையை (Artificial Gravity) உருவாக்குகிறது.

கிறிசாலிஸ் உள் கட்டமைப்பு

கிறிசாலிஸ் விண்கலம் வெளித்தோற்றம்(Hyperion Chrysalis Spaceship), அதன் செயல்முறைையை பார்க்கும்போது உடனே நினைவுக்கு வருவது, அதன் உட்கட்டமைப்பு தான. மனிதர்களின் வாழ்வியல் முறையே பிறந்து வளர்ந்து அழிவதென்றால் அதன் உட்கட்டமைப்பு, சூழல் என பார்க்கும்பொழுது செயற்கை ஈர்ப்புவிசையை உருவாக்க, விண்கலத்தின் மையப்பகுதி தொடர்ச்சியாகச் சுழலும் சிலிண்டர்களைக் கொண்டிருக்கும். பூமியின் இயற்கையான சூழலை உருவகப்படுத்தும் பிரம்மாண்டமான இடங்கள் இருக்கும். இங்குதான் உணவு உற்பத்தி, கழிவு மறுசுழற்சி, நீர் சுழற்சி அனைத்தும் நடைபெறும் என்று தெரியவருகிறது.

மனிதர்கள் வாழ்வியல்

இதைத்தொடர்ந்து, ஆண்டு விழாக்கள், விண்மீன்களைப் பார்ப்பதற்காக 130 மீட்டர் உயரமுள்ள 'விண்வெளி குவிமாடமும்' இருக்கும். செயற்கை நுண்ணறிவு (AI), ரோபோக்கள், மற்றும் மனிதர்கள் இணைந்து வாழ்க்கைத் தேவைகள், நிர்வாகம் மற்றும் கல்வியைக் கவனித்துக் கொள்வார்கள். சுருக்கமாகச் சொன்னால், இது வெறும் விண்கலம் அல்ல, இது மற்றொரு சிறிய பூமி மற்றொரு கலச்சாரம் என்று கூறலாம்

கப்பலே ஏவுதளம்

இவ்வளவு பிரம்மாண்டமான கப்பலை பூமியில் கட்டவே முடியாது. எனவே, இந்தக் கட்டுமானம் பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள நிலையான ஈர்ப்புவிசைப் பகுதியான லாக்ரேஞ்ச் புள்ளி 1 (L1)-இல் விண்வெளியிலேயே நடைபெறும். விண்வெளியில் கட்டுமானத்திற்குத் தேவையான அனைத்து சூரிய ஒளியும், குறைவான ஈர்ப்புவிசையும் இந்தப் புள்ளியில் கிடைப்பதால், இதுவே ஏவுதளமாகவும் செயல்படும்.

மேலும் படிக்க : விண்வெளி வீரர்களை தரையிறக்கும் சோதனை : வெற்றிகரமாக நடத்திய இந்தியா

மனிதனின் கேள்வி

ஆனால், இந்தப் பயணத்திற்கான மனிதர்களைத் தயார் செய்யும் திட்டம் மிகவும் ஆச்சரியமானது. விண்கலம் ஏவுவதற்கு முன்பு, தேர்ந்தெடுக்கப்பட்ட குழு உறுப்பினர்கள் பல தசாப்தங்களுக்கு அண்டார்டிகாவில் தனிமைப்படுத்தப்பட்டு வாழ்வார்கள். அப்படி இருந்தால் மட்டும் தான் விண்வெளியில் நீண்ட காலம் அடைபட்டிருப்பதால் ஏற்படும் சமூக மற்றும் உளவியல் சவால்களைச் சமாளிக்க இந்தக் கடுமையான தனிமைப் பயிற்சி அவசியம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

மனித வரலாற்றில் பெரிய புதுமை

'கிறிசாலிஸ்' திட்டம், வெறும் பொறியியல் சவால்களை மட்டும் கொண்டதல்ல, அது மனித வரலாற்றில் ஒரு புதுமையை புகுத்தி, மாற்றத்தை கையில் எடுத்துள்ளது. ஆனால், பூமியை தாண்டி ஒரு கண்டம், அதில் தான் மனிதனின் முழு வாழ்வும் என்று நினைக்கும்பொழுது ஆச்சரியத்துடன், இது முடியுமா என்று கேள்வியும் நம்மை தொற்றிக் கொள்கிறது. நவீன விஞ்ஞான உலகில் முடியாதது இல்லை என்பதே நிதர்சனம்

=====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in