

யார் இந்த அனில் மேனன்?
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனில் மேனன், நாசாவின் விண்வெளி வீரர் மட்டுமல்லாமல் அவசரகால மருத்துவ நிபுணர், மெக்கானிக்கல் இன்ஜினியர் மற்றும் அமெரிக்க விண்வெளிப் படையின் கர்னலாகவும் பணியாற்றியவர்.
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் நியூரோபயாலஜி படித்த அவர், ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் மருத்துவம் மற்றும் பொறியியல் துறைகளில் உயர்கல்வி முடித்துள்ளார்.
கேரள வேர்களைக் கொண்ட விண்வெளி வீரர்:
அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தாலும், அனில் மேனனின் குடும்ப வேர்கள் கேரள மாநிலத்துடன் தொடர்புடையவை. இதனால் இந்தியாவிலும், குறிப்பாக கேரளாவிலும் அவரது சாதனை பெருமையுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஸ்பேஸ்எக்ஸ் முதல் நாசா வரை:
நாசா விண்வெளி வீரராக தேர்வு செய்யப்படுவதற்கு முன்பு, எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் முதல் "Flight Surgeon" ஆக பணியாற்றிய அனில் மேனன், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பிய Demo-2 திட்டத்திலும் முக்கிய பங்காற்றினார்.
பின்னர் 2021-ஆம் ஆண்டு நாசாவின் விண்வெளி வீரர் பயிற்சி திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டார்.
விண்வெளியில் நடந்த இந்தியர்
வாஷிங்டன்: சர்வதேச விண்வெளி நிலையத்திற்கும் , ஹூஸ்டனில் உள்ள நாசாவின் கட்டுப்பாட்டு மையத்திற்கும் இடையே அதிவேகத் தகவல்தொடர்புக்கான, விண்வெளியிலிருந்து தரைக்கு செல்லும் ஆண்டெனாவில் பழுது ஏற்பட்டது.
இதையடுத்து ஆண்டெனாவை மாற்றுவதற்காக விண்வெளி வீரர் அனில் மேனன், விண்வெளி வீராங்கனை சோபி அடெனெட்டும் விண்வெளியில் நடந்து ஆண்டெனாவை மாற்றுவதற்கான பணியை மேற்கொண்டனர்
2 வது முறையாக நடைபயணம்:
அனில் மேனன் விண்வெளி நடைபயணம் மேற்கொள்வது இது இரண்டாவது முறையாகும். ஏற்கனவே,அனில் மேனனும், விண்வெளி வீராங்கனை ஜெசிகாவும் சூரிய மின் உற்பத்தி சாதனத்தில் மாற்றங்களை செய்ய விண்வெளியில், 7 மணி நேரம் நடந்துள்ளனர்.
===============