

எரிக் ஆட்ம்ஸ் ராஜினாமா
Zohran Mamdani Wins US Mayor Election 2025 : வாஷிங்டன், அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக இருந்தவர் எரிக் ஆடம்ஸ். இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. எனவே எரிக் ஆடம்ஸ் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து புதிய மேயரை தேர்வு செய்யும் தேர்தல் நேற்று நடைபெற்றது.
மேயர் தேர்தல்
இதில் ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வம்சாவளியான ஜோஹ்ரான் மம்தானியும் (வயது 34), குடியரசு கட்சி வேட்பாளர் கர்டிஸ் ஸ்லிவாவும் முன்னிலை வகித்து வந்தனர். மிகப்பெரிய நகரங்களுள் ஒன்றான நியூயார்க் மேயர் தேர்தல் அமெரிக்க அரசியலிலும் பிரதிபலிக்கும் என்பதால் இது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் நடந்தது.
டிரம்ப் எச்சரிக்கை
இந்த தேர்தலில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை கடுமையாக விமர்சித்து வரும் மம்தானியே வெற்றி பெறுவார் என கருத்து கணிப்புகள் முன்கூட்டியே தெரியவந்திருந்தது. ஆனால் டிரம்ப் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். நியூயார்க் மேயராக மம்தானி தேர்வு பெற்றால் அங்கு பொருளாதார, சமூக பேரழிவு ஏற்பட்டு நிலைமை மோசமாகி விடும். இதனால் நியூயார்க் நகரத்துக்கு அதிக நிதி ஒதுக்க முடியாது என்று டிரம்ப் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.
முதல் இளைய மேயர்
ஆனால், டிரம்பின் எச்சரிக்கை பதிலளிக்கும் விதமாக அமெரிக்காவின் நியூயார்க் நகர முதல் முஸ்லீம் மேயர் மற்றும் முதல் இந்திய வம்சாவளி மேயர் என்ற பெருமையை ஜோஹ்ரான் மம்தானி தேர்வில் வெற்றி பெற்று மேயரானார். மேயர் பதவிக்கான தேர்தலில் ஆளுங்கட்சி வேட்பாளரை வீழ்த்தி ஜனநாயக கட்சியின் ஜோஹ்ரான் மம்தானி அபார வெற்றி பெற்றுள்ளது, அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக உருவெடுத்துள்ளது.
குவியும் பாராட்டுக்கள்
இந்த வெற்றியின் மூலம், மம்தானி நியூயார்க் நகரத்தின் முதல் முஸ்லீம் மேயராகாவும், தலைமுறைகளில் அதன் இளைய மேயராகவும் பதிவாகியுள்ளார். இவரின் இத்தகைய வெற்றியை டிரம்ப் ஆதரவாளர்கள் பலரும் விமர்சித்து வரும் நிலையில், ஜனநாயக கட்சி சார்பாக அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.