ரஷ்யாவிடம் இருந்து ”3 கோடி பீப்பாய் எண்ணெய்” : கொள்முதல் செய்த இந்தியா!

India Buys 30 Million Barrels of Oil from Russia : முன்பு தள்ளுபடி விலையில் கிடைத்த ரஷ்ய எண்ணெய் ஆனது இப்போது 2 முதல் 8 டாலர்கள் வரை அதிக பிரீமியம் செலுத்தி வாங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
Iran israel, america war: India Buys 30 Million Barrels of Oil from Russia!
Iran israel, america war: India Buys 30 Million Barrels of Oil from Russia!source: google
1 min read

இந்தியா, அமெரிக்கா ஒப்பந்தம்

India Buys 30 Million Barrels of Oil from Russia : இந்தியா, அமெரிக்கா ஒப்பந்தம் காரணமாக ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்து வந்தது. இந்நிலையில், ஈரான் மீது இஸ்ரேல் , அமெரிக்கா கூட்டு தாக்குதல் நடத்தியது.

பேரழிவுகளை சந்தித்த ஈரான்

இதனால் ஈரான் பேரழிவுகளை சந்தித்த நிலையில், இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தியது.

ஹோர்முஸ் நீரிணை மூடல்,உலக நாடுகள் பாதிப்பு

மேலும் பார்சீக வளைகுடா பகுதிகளைய் இணைக்கும் ஹோர்முஸ் நீரிணையை மூடியது.

ஈரானின் இந்த அதிரடி நடவடிகையால் இந்தியா உட்பட உலக நாடுகள் முழுவதும் கச்சா எண்னெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு

குறிப்பாக இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு, ஹோட்டலகள் மூடல் என அடுத்தடுத்த செய்தி வெளியாகி மக்களை அச்சமடைய வைத்தது.

அச்சம் வேண்டாம், மத்திய அரசு தகவல்

இருந்தபோதிலும் மத்திய அரசு மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை, எரிபொருள் விநியோகம் சீராக நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளது.

அமெரிக்கா அனுமதி

இந்நிலையில், ரஷ்யாவிடமிருந்து மீண்டும் கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா, இந்தியாவுக்கு அனுமதி கொடுத்திருந்தது.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி, இந்திய நிறுவனங்கள் சுமார் 3 கோடி பேரல் கச்சா எண்ணெய்யை வாங்கியிருக்கின்றனர் என்று ப்ளூம்பெர்க் அறிக்கை தெரிவிக்கிறது.

ப்ளூம்பெர்க் வெளியிட்ட அறிக்கை

இதுதொடர்பான ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, இந்தியன் ஆயில் சுமார் 1 கோடி பேரல்களையும், ரிலையன்ஸ் 1 கோடி பேரல்களையும் வாங்கியுள்ளதாகவும்.

எஞ்சிய 1 கோடி பேரல்களை பிற இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் வாங்கியுள்ளதாகவும் ப்ளூம்பெர்க் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

ப்ரீமியம் முறையில் கச்சா எண்னெய்

முன்பு தள்ளுபடி விலையில் கிடைத்த ரஷ்ய எண்ணெய் ஆனது இப்போது 2 முதல் 8 டாலர்கள் வரை அதிக பிரீமியம் செலுத்தி வாங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in