

ட்ரில்லியன் ஹைட்ரஜன் கிடைத்த கதை
Natural Hydrogen Discovery in Earth : 1987-ம் ஆண்டு மாலியில் உள்ள கிராமத்தில் ஒரு தொழிலாளி சிகரெட் பற்ற வைத்தபோது, அது சாதாரண புகை அல்ல, அது உலக எரிசக்தி புரட்சிக்கான தீப்பொறி என்று யாரும் அறிந்திருக்கவில்லை.
பூமிக்கடியில் புதையல்
அப்படி ஆரம்பமாகி தெரியவந்தது தான். ஆம், பூரகேபோகோ கிராமத்தில் அமைக்கப்பட்ட புதிய தண்ணீர்க் கிணற்றின் அருகே ஏற்பட்ட அந்த வெடிப்புதான், பூமிக்கு அடியில் புதைந்திருக்கும்'இயற்கை ஹைட்ரஜன்' இருப்புக்களை உலகிற்கு அடையாளம் காட்டியது.
ஹைட்ரஜன் தேவை 2025 க்கும் 5 மடங்கு அதிகமாகும்
பூரகேபோகோ அருகே வெடித்த அந்தக் கிணற்றை 2011-ல் ஹைட்ரோமா (Hydroma) நிறுவனம் ஆய்வு செய்யத் தொடங்கியது. 2012-க்குள், அந்த ஒற்றை இயற்கை ஹைட்ரஜன் கிணறு மூலம் பூரகேபோகோ கிராமம் முழுவதும் மின்சாரம் பெறத் தொடங்கியது.
இன்றுவரை, உலகின் முதல் மற்றும் ஒரே உற்பத்தி செய்யும் இயற்கை ஹைட்ரஜன் கிணறு இதுதான். ஏன் ஹைட்ரஜன் இவ்வளவு முக்கியம்? ஹைட்ரஜன் என்பது மிகச் சிறிய மற்றும் எளிமையான மூலக்கூறு. எரிபொருள் கலங்களில் (Fuel Cells) ஆக்ஸிஜனுடன் இது கலக்கப்படும்போது பசுமை இல்ல வாயு உமிழ்வுகள் இல்லை.
வெப்பம் மற்றும் தண்ணீர் மட்டுமே துணைப் பொருட்கள். இது ஒரு தூய்மையான எரிசக்தி மூலமாகும். மைக்ரோஎலெக்ட்ரானிக்ஸ், வாகனங்கள் மற்றும் கட்டிடங்களுக்குச் சக்தி அளிப்பதற்காக, இதன் தேவை 2050-ம் ஆண்டுக்குள் 5 மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தங்க ஹைட்ரஜனை தேடும் எண்ணெய் நிறுவனங்கள்
நீண்ட காலமாக, ஹைட்ரஜன் மிக லேசாகவும் வினைத்திறன் மிக்கதாகவும் இருப்பதால், அது புதைபடிவ எரிபொருட்களைப் போல பூமியின் மேலோட்டில் குவியாது என்று விஞ்ஞானிகள் நம்பினர். ஆனால், மாலியில் கண்டறியப்பட்ட இந்தக் கண்டுபிடிப்பு, இந்த விஞ்ஞானக் கருத்தையே முற்றிலுமாக மாற்றிவிட்டது.
இப்போது, எண்ணெய் மற்றும் எரிவாயுவை ஆய்வு செய்யும் நிறுவனங்கள், இயற்கையாகக் கிடைக்கும் இந்த "தங்க ஹைட்ரஜன்" இருப்புக்களைத் தேடுவதில் தீவிரமாக உள்ளன.
2 சதவிகிகதம் 200 ஆண்டுகளுக்கு பயன்படுத்த முடியும்
தற்போது இந்த கிணறின் மூலம் உலகிற்கு தெரிய வந்த இந்த பூமிக்கு அடியில் இருக்கும் எரிசக்திப் புதையலாகிய தங்க ஹைட்ரஜன்(Gold Natural Hydrogen Exploration) குறித்து விஞ்ஞானிகள் கொடுத்த புதிய மதிப்பீடு பிரமிக்க வைக்கின்றன. கடந்த 1 பில்லியன் ஆண்டுகளில் பூமியின் மேலோடு, 170,000 ஆண்டுகளுக்குத் தேவையான ஆற்றலைச் சந்திக்கப் போதுமான ஹைட்ரஜனை உருவாக்கியுள்ளது.
பூமிக்கடியில் சுமார் 6.2 டிரில்லியன் டன் ஹைட்ரஜன் இருப்பு உள்ளது. இது ஏற்கனவே அறியப்பட்ட மொத்த எண்ணெய் இருப்பை விட 26 மடங்கு அதிகம்.
இந்த மொத்த இருப்புக்களில் வெறும் 2% ஐ மட்டும் பயன்படுத்தினால், தற்போது புதைபடிவ எரிபொருட்களைப் பயன்படுத்தும் தேவையை 200 ஆண்டுகளுக்கு ஈடுசெய்ய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
அத்துடன், தொழிற்சாலைகளில் உருவாக்கப்படும் ஹைட்ரஜனைப் போலன்றி, இயற்கை ஹைட்ரஜன் பூமிக்கு அடியிலேயே 'சேமிக்கப்பட்டு' இருப்பதால், இதன் கார்பன் தடயமும் மிகக் குறைவு.
ஹைட்ரஜன் உருவாவதற்கான 6 'ரகசிய' மூலப்பொருட்கள்! இயற்கை ஹைட்ரஜன் உருவாகிச் சேமிக்கப்படுவதற்கு 6 முக்கிய புவியியல் அம்சங்கள் தேவை என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஹைட்ரஜனை கண்டுபிடிக்க முக்கியமானவை
ஒரு ஹைட்ரஜன் இருப்பைக் கண்டறிய இந்த 6 நிபந்தனைகளும் அவசியம்: ஏராளமான நிலத்தடி நீர் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த பாறைகள் (Basalt) அல்லது கதிரியக்கத் தனிமங்கள் (Uranium, Thorium) கொண்ட பாறைகள் வேண்டும்.
வினை வேகத்தைக் கூட்டும் வகையில் 250 முதல் 300 °C வரையிலான வெப்பநிலை தேவை. மேலும், உருவான ஹைட்ரஜனை சேமிக்கக்கூடிய நுண்துளைகள் கொண்ட மணற்கல் போன்ற பாறைகள். நீர் புகாத சீல்: வாயுவை வெளியேறாமல் உள்ளேயே சிக்க வைக்க ஒரு உப்பு அல்லது களிமண் அடுக்கு (Shale).
காலநிலை நெருக்கடியை குறைக்கமுடியும்
ஹைட்ரஜனை உண்ணும் நுண்ணுயிர்களின் செயல்பாடு குறைவாக இருக்க வேண்டும். இந்நிலைமைகள் அனைத்துக் கண்டங்களிலும் உள்ளன.
இதன் அடிப்படையில் அமெரிக்காவில் உள்ள 48 மாகாணங்களில் ஹைட்ரஜன் இருப்புக்கள் உள்ள இடங்களைக் காட்டும் வரைபடத்தை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.
இந்தத் தூய்மையான இயற்கை ஹைட்ரஜனைக் கண்டறிந்து பயன்படுத்துவதன் மூலம் சுரங்கத் தொழில்கள் முதல் உரங்கள் தயாரிப்பு வரை பல துறைகளில் கார்பன் உமிழ்வைக் கடுமையாகக் குறைக்க முடியும்.
இந்த புதிய எரிசக்தி மூலம், காலநிலை நெருக்கடி தொடர்பான அபாயங்களைத் தணிக்க முடியும் என்பதில் நிபுணர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர்.