மீண்டும் NVIDIA CEO ஆன ஜென்சன் ஹுவாங்... பின்னணியில் டிரம்பின் முக்கிய தலையீடு!

NVIDIA நிறுவனத்தின் CEO பதவியிலிருந்து விலகிய ஜென்சன் ஹுவாங், மீண்டும் அதே பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார் அவர் மீண்டும் CEOவாக வருவதற்கு டிரம்ப் முக்கிய முயற்சி எடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Jensen Huang Reinstated as Nvidia CEO: Trump's Intervention Plays Key Role
Jensen Huang Reinstated as Nvidia CEO: Trump's Intervention Plays Key RoleGoogle
1 min read

CEO பதவியிலிருந்து விலகிய ஜென்சன் ஹுவாங் :

உலகின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான NVIDIA-வின் இணை நிறுவனரும் CEO-வுமான ஜென்சன் ஹுவாங், கடந்த நவம்பர் 12-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார்

அவருக்கு பதிலாக நிறுவனத்தின் நிதிப் பிரிவு தலைவரான கோலெட் கிரெஸ் இடைக்கால CEO-வாக நியமிக்கப்பட்டார்.

ஜென்சன் ஹுவாங் தொடர்பான தனிப்பட்ட உறவு சர்ச்சைகள் மற்றும் சீன உளவுத்துறை தொடர்பான சந்தேகங்கள் எழுந்ததை தொடர்ந்து இந்த விவகாரம் அமெரிக்காவில் பெரும் கவனத்தை பெற்றது.

இதையடுத்து, NVIDIA நிர்வாகக் குழு அவருக்குப் பதிலாக புதிய CEO-வைத் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டது.

மீண்டும் CEO ஆக வர டிரம்ப் ஆதரவு :

இந்தச் சூழலில், ஜென்சன் ஹுவாங் மீண்டும் NVIDIA நிறுவனத்தின் CEO-வாக வர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதற்காக நிறுவனத்தின் நிர்வாகக் குழுவிடமும் டிரம்ப் நேரடியாக பேசியதாகவும், துணை அதிபர் JD Vance-ம் இந்த முயற்சியில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், ஜென்சன் ஹுவாங் மீண்டும் பொறுப்பேற்பதால் அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அவரது தலைமையில் NVIDIA தொடர்ந்து செயல்படுவது அமெரிக்காவின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முக்கியம் என்றும் டிரம்ப் கருதியதாகக் கூறப்படுகிறது.

மீண்டும் CEO-வாக நியமித்த NVIDIA நிர்வாகக் குழு:

இதையடுத்து, நவம்பர் 23-ம் தேதி NVIDIA நிறுவனத்தின் நிர்வாக குழு ஒருமனதாக ஜென்சன் ஹுவாங்கை மீண்டும் நிறுவனத்தின் தலைவராகவும் CEO-வாகவும் நியமித்தது.

அமெரிக்க அரசின் உயர் அதிகாரிகளிடமிருந்தும் இந்த முடிவு தொடர்பாக கருத்துகள் பெறப்பட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனை வரவேற்ற டிரம்ப், NVIDIA நிர்வாகக் குழு சரியான முடிவை எடுத்துள்ளதாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டார்.

'இதற்கு நான்தான் காரணம்' - டிரம்ப் பெருமிதம்

ஜென்சன் ஹுவாங் மீண்டும் CEO-வாக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து பேசிய டிரம்ப், இந்த முடிவில் தனது தலையீடு முக்கிய பங்கு வகித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

நிர்வாகக் குழுவினரிடம் தான் பேசியதாகவும், ஜென்சன் ஹுவாங் மீண்டும் பொறுப்புக்கு வருவதற்கு ஆதரவாக அவர்களை சம்மதிக்க வைத்ததாகவும் டிரம்ப் பெருமையாக தெரிவித்துள்ளார்.