மோடியை காரில் அழைத்து சென்ற ஜோர்டன் இளவரசர்-வைரலாகும் புகைப்படம்!

PM Modi Visit Jordan : ஜோர்டான் நாட்டுக்கு சென்ற பிரதமர் மோடியை அந்நாட்டு பட்டத்து இளவரசர் பின் அல் ஹுசைன் இரண்டாம் அப்துல்லா அருட்காட்சியகத்திற்கு காரில் அழைத்து சென்றார்.
Jordan’s Crown Prince drives PM Narendra Modi to country’s largest museum in special gesture Photo Goes Viral News in Tamil
Jordan’s Crown Prince drives PM Narendra Modi to country’s largest museum in special gesture Photo Goes Viral News in TamilGoogle
1 min read

ஜோர்டன் நாட்டுக்கு பிரதமர் மோடி பயணம்

PM Modi Visit Jordan : பிரதமர் நரேந்திர மோடி ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.. முதல் கட்டமாக பிரதமர் மோடி நேற்று ஜோர்டான் நாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார். பிரதமர் மோடியை விமான நிலையத்திற்கே வந்து, ஜோர்டான் பிரதமர் ஜாபர் ஹசன் வரவேற்றார். தொடர்ந்து பிரதமர் மோடி ராணுவ அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.

பின்னர் ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவை , அவரது அரண்மனையில் சந்தித்து பேசியிருந்தார். இந்நிலையில், இன்று பிரதமர் மோடியை, அந்நாட்டு பட்டத்து இளவரசர் அல் ஹுசைன் இரண்டாம் அப்துல்லாவை அருட்காட்சியகத்திற்கு காரில் அழைத்து சென்றார். பிரதமர் மோடியும் ஜோர்டான் பட்டத்து இளவரசரும் ஒரே காரில் பயணித்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. பிரதமர் மோடி தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு எத்தியோப்பியா புறப்பட்டார். அப்போதும், விமான நிலையம் வரை காரை தானே ஒட்டி வந்த ஜோர்டான் பட்டத்து இளவரசர், மோடியை வழியனுப்பி வைத்தார்.

பிரதமர் மோடி பேசியது

இந்த சந்திப்பின்போது பிரதமர் மோடி தனது பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும். பயங்கரவாதத்திற்கு எதிராக ஜோர்டான் நாடு தெளிவான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. காசா பிரச்சனையில் நீங்கள் ஆரம்பத்திலிருந்தே மிகவும் சுறுசுறுப்பான பங்களிப்பை வழங்கி வருகிறீர்கள். இப்பகுதியில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் நிலவும் என்று நாங்கள் அனைவரும் நம்புகிறோம்.

ஜோர்டன் இளவரசர் பேசியது

ஜோர்டான் பயங்கரவாதத்திற்கு எதிராக, அனைத்து மனிதகுலத்திற்கும் ஒரு வலுவான செய்தியை அனுப்பி உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். பின்னர் ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா பின் அல் ஹுசைன் பிரதமர் மோடியின் வருகை இரு நாடுகளுக்கும் இடையிலான பல ஆண்டு கால நட்பு, பரஸ்பர மரியாதையை பிரதிபலிக்கிறது. இந்தியாவும், ஜோர்டானும் வலுவான கூட்டாண்மையையும், தொலை நோக்குப் பார்வையையும் கொண்டுள்ளன.

பல ஆண்டுகளாக, இருநாடுகளுக்கு இடையே உறவுகள் பல துறைகளில் விரிவடைந்துள்ளது. தொழில், விவசாயம் மற்றும் எரிசக்தி போன்ற பல துறைகளில் பொருளாதார உறவுகளை வலுப்படுத்த உதவும் என்று ஜோர்டன் பட்டத்து இளவரசர் தெரிவித்தார். தற்போது இருவரும் சேர்ந்து அருங்காட்சியகத்திற்கு சென்ற புகைப்படம் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in