குடியரசு தலைவர் மாளிகையில் நேபாள பிரதமர் பாலேந்திரா ஷா : பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சரையும் சந்தித்தார்..!

இரண்டு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நேபாள பிரதமர் பாலேந்திர ஷாவுக்கு டெல்லியில் அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது...
Nepal PM Balendra Shah Receives Ceremonial Welcome at Rashtrapati Bhavan, Meets PM Modi
Nepal PM Balendra Shah Receives Ceremonial Welcome at Rashtrapati Bhavan, Meets PM ModiGoogle
1 min read

குடியரசு தலைவர் மாளிகையில் அணிவகுப்பு மரியாதை :

நேபாளத்தின் புதிய பிரதமராகபொறுப்பேற்றுள்ள பாலேந்திர ஷா, இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று நவம்பர் 22-ம் தேதி டெல்லி வந்த அவருக்கு விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் ஜிதின் பிரசாதா வரவேற்பு அளித்தார்.

இதனை தொடர்ந்து இன்று (நவம்பர் 23) குடியரசுத் தலைவர் மாளிகையான ராஷ்டிரபதி பவனில் பாலேந்திர ஷாவுக்கு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது பிரதமர் மோடி அவரை வரவேற்றார். மேலும், முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.

பிரதமர் மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை :

இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்து பாலேந்திர ஷா பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

இந்த சந்திப்பில் இந்தியா - நேபாளம் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசிக்க உள்ளனர்.

குறிப்பாக வர்த்தகம், எரிசக்தி, உள்கட்டமைப்பு, போக்குவரத்து இணைப்பு, கல்வி, தொழில்நுட்பம் மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

ஜெய்சங்கருடன் ஏற்கெனவே நடைபெற்ற சந்திப்பு :

இந்தியாவுக்கு வந்த முதல் நாளிலேயே வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை பாலேந்திர ஷா சந்தித்துப் பேசினார்.

டெல்லியில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் இந்தியா - நேபாளம் இடையிலான நட்புறவு, வர்த்தகம், மின்சாரம், கலாச்சாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.

மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது குறித்தும் இருவரும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

இந்தியா நேபாளம் உறவை வலுப்படுத்த முக்கிய ஆலோசனை :

இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வரும் நட்புறவை மேலும் வலுப்படுத்துவது இந்த பயணத்தின் முக்கிய நோக்கமாக பார்க்கப்படுகிறது.

இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை வர்த்தகம், மின்சார பரிமாற்றம், சாலை மற்றும் ரயில் போக்குவரத்து இணைப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்தும் இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட உள்ளது.

=======================