அமைதிக்கான நோபல் பரிசை வென்ற மரியா கொரினா ! உண்மையில் யார் இவர்?

Nobel Peace Prize 2025 Winner : டிரம்பின் எதிர்பார்ப்புக்கு இடையே அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு என்ற கேள்விக்கு, வெனிசுலா நாட்டின் அரசியல்வாதியும், பொறியாளருமான மரியா கொரினா பதிலாக அமைந்துள்ளார்.
Nobel Peace Prize winner Maria Korina! Who is she really?
Nobel Peace Prize 2025 winner María Corina Machado Who is she really?
2 min read

மரியா கொரினா :

Nobel Peace Prize 2025 winner María Corina Machado : அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மரியாவின் முழுப்பெயர் மரியா கொரினா மசோடா பரிஸ்கா ஆகும். இவர் வெனிசுலா நாட்டில் முக்கியமான அரசியல் தலைவர் ஆவார். அடிப்படையில் இவர் பொறியாளர் ஆவார்.

பன்முகத்தன்மை கொண்டவர்

1967ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி பிறந்த இவர், 2002ம் ஆண்டு முதல் அந்த நாட்டு(María Corina Machado Biography in Tamil) அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2002ம் ஆண்டு சுமதே என்ற அமைப்பை தொடங்கினார். பின்னர், வென்தே வெனிசுலா கட்சியில் தேசிய ஒருங்கிணைப்பாளராக பதவி உயர்வு பெற்றார். எழுத்து, கலை, அரசியல் என தனது குடும்ப உறுப்பினர்களின் பின்னணியும், சமூக சார்ந்து இருந்ததால், இவரின் பயணத்திற்கு இது ஒரு ஆரோக்கியமான தொடக்கமாக இருந்தது.

சக்திவாய்ந்த பெண்களில் இவரும் ஒருவர்:

தொடர்ந்து அரசியல் பணிகளில் ஈடுபட்டும், சமூகத்திற்கான குரல் கொடுத்து வந்த இவர், 2018ம் ஆண்டு பிபிசி பட்டியலிட்ட உலகின் மிகபும் பிரபலமான 100 பெண்களில் ஒருவராக இடம்பெற்றார். நடப்பாண்டில் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்ட உலகின் செல்வாக்கான 100 பெண்களில் ஒருவராகவும் இடம்பெற்று இருந்தார். தொடர் செல்வாக்கு காரணமாக வெனிசுலா நாட்டின் அரசியலில் முக்கிய அங்கமாக மாறிய இவருக்கு அரசியல் தொண்டர்களை தாண்டி, இவருக்கென தனி ரசிகர்களே இருந்தார்கள் என்று கூட சொல்லலாம்.

அரசியல் போராட்டம் :

2012ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெனிசுலா அதிபர் தேர்தலுக்கு போட்டியிட்ட மரியா ஹென்ரிக்கிற்கு எதிராக போட்டியிட்டு தோல்வி அடைந்த இவர். 2014ம் ஆண்டு வெனிசுலாவில் வெடித்த போராட்டத்தில், போராட்டக்காரர்களை ஒருங்கிணைத்து நிகோலஸ் அரசுக்கு எதிராக போராடி தன்னை முதன்மை படுத்தி கொண்டு எழுச்சி குரல்கள் எழுப்பி போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தார்.

முதன்மை வேட்பாளர்

2023ம் ஆண்டு வென்தே வெனிசுலாவின் முதன்மை வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால், கடந்த 2023ம் ஆண்டு ஜுன் 30ம் தேதி வெனிசுலா நாட்டு தேர்தலில் போட்டியிட அவருக்கு 15 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. பின்னர், அந்த நாட்டு உச்சநீதிமன்றம் அந்த தடையை உறுதி செய்து அவரின் அரசியல் பயணத்திற்கு முட்டுக்கட்டை போட்டது. ஆனால், சமூக அக்கறை கொண்ட இவர், அரசியலுக்கு அடித்தளமான சமூக சீர்திருத்தங்களில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார்.

உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்

மரியாவிற்கு பதிலாக கடந்த 2024ம் ஆண்டு கொரினா யோரிஸ் மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக பின்னர் எட்மண்டோ மாற்றப்பட்டார். கடந்தாண்டு ஆகஸ்ட் 1ம் தேதி தி வால் ஸ்ட்ரீட் ஜார்னலில் எழுதிய கடிதம் மிகப்பெரிய அளவில் பேசுபொருளானது இதற்கு பலரும் எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் முன்வைத்த நிலையில், இவரின் அயராத உழைப்பு தொடர்ந்தது.

அமைதிக்கான நோபல் பரிசு 2025 :

ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் நோபல் பரிசானது, இந்த ஆண்டும் 6 பிரிவுகளாக வழங்கப்பட்டு கொண்டிருக்கும் நிலையில். அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைகளை மேம்படுத்துவதற்காகவும், சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்திற்கு நியாயமான மற்றும் அமைதியான மாற்றத்தை அடைவதற்கான அவரது போராட்டத்திற்காகவும் மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு(Nobel Peace Prize 2025 To María Corina Machado) வழங்கப்பட்டுள்ளது என நோபல் பரிசு கூட்டமைப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : தகர்ந்த டிரம்ப் கனவு! அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா பெண்ணுக்கு

அமைதி நோபல் இவருக்கு உரித்ததே

அமைதிக்கான நோபலை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிகம் எதிர்பார்த்து இருந்த நிலையில் தற்பொழுது இவருக்கு கிடைத்துள்ளது, இவர் யார்? என்ன செய்து கொண்டு இருக்கிறார் என அனைவரின் கவனத்தையும் இவரின் பக்கம் ஈர்த்துள்ளது. இத்தனை பெரும் போராட்டங்களை சந்தித்து இன்று வரை மக்களுக்கான சமூக நீதி குரலாக இருந்து, அமைதி நோபல் பரிசை வென்றுள்ள இவருக்கு வெனிசுலா பொதுமக்கள் மற்றும் உலக நாடு தலைவர்கள் என பலரும் தங்களது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

========

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in