இலக்கியத்திற்கான நோபல் பரிசு இவருக்கு தான் - வென்ற எழுத்தாளர்!

Nobel Prize for Literature 2025 Winner : 6 பிரிவுகளாக கொடுக்கபட்டு கொண்டிருக்கும் நோபல் பரிசுகளில், 4 வது பிரிவான இலக்கியத்திற்கான நோபல் பரிசு லாஸ்லோ கிராஸ்னஹோர்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.
Hungarian Author Laszlo Krasznahorkai Wins Nobel Prize For Literature 2025 Winner
Hungarian Author Laszlo Krasznahorkai Wins Nobel Prize For Literature 2025 Winner
1 min read

இலக்கியத்திற்கான நோபல் பரிசு :

Nobel Prize for Literature 2025 Winner : வேதியலுக்கான நோபல் பரிசு அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 3 ஆராய்ச்சியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டது, இதற்கு முன்னாள் மருத்துவம், இயற்பியலுக்கும் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டு வழங்கப்பட்டது. ஆனால், தற்பொழுது இலக்கியத்திற்கான பரிசை ஹங்கேரியை சேர்ந்த எழுத்தாளர் லாஸ்லோ கிாஸ்னஹோர் என்பவருக்கும் மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கலையின் சக்தியை மீட்டெடுத்தவர்

அழிவும் அச்சமும் நிறைந்த காலகட்டத்தில் கூட கலைக்கான சக்தியை மறுபடியும் நிரூபிக்கும் வகையில், அவர் எழுதிய படைப்புகள் ஆழமான சிந்தனைக்கும் கற்பனையுக்கும் தக்கவை என்ற காரணத்தைக் கூறி, அவருக்கு இந்த உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது என்று ஸ்வீடிஷ் அகாடமி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யார் இந்த லாஸ்லோ கிராஸ்னஹோர்கைக்கு

1954 ஆம் ஆண்டு ஹங்கேரியில் பிறந்த இவரின், எழுத்து மற்றும் கலை ஆர்வம் சிறுவயதில் இருந்தே ஆரம்பமானது. அதன் தொடர்ச்சியாக, 1985 இல் வெளியான அவரது முதல் நாவல் Satantango உலகளாவிய பாராட்டைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து அவரது படைப்புகள் உலக இலக்கியத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின. அவரது எழுத்து நடை சிக்கலான வாக்கிய அமைப்புகள், நீண்ட தத்துவ விளக்கங்கள் மற்றும் மனித வாழ்க்கையின் வீழ்ச்சியைப் பற்றிய ஆழமான பார்வையால் தனித்துவம் பெற்றது.

அவரது கதைகள் பெரும்பாலும் மனிதர்கள் எதிர்கொள்ளும் அழிவு, நம்பிக்கை இழப்பு, மற்றும் சமூகத்தின் சீரழிவு போன்ற கருப்பொருள்களை மையமாகக் கொண்டவை. அதே நேரத்தில், அந்த இருளின் நடுவிலும் கலை மற்றும் மனித மனத்தின் ஒளியை வெளிப்படுத்தும் விதமாக அவரது எழுத்துகள் வாசகர்களை சிந்திக்க வைக்கும் வகையில் அமைந்திருக்கும்.

தொடரும் நோபல் பரிசு

மருத்துவத்துக்கான நோபல் பரிசு -3 விஞ்ஞானிகள்- மேரி பிரங்கோ(Mary E. Brunkow), பிரட் ராம்ஸ்டெல் (Fred Ramsdell), ஷிமொன் சாகாகுச்சி(Shimon Sakaguchi)

இயற்பியல் - 3 ஆராய்ச்சியாளர்கள்- ஜான் கிளார்க்(John Clarke), மைக்கேல் எச். டெவோரெட்(Michel H. Devoret), ஜான் எம். மார்டினிஸ் (John M. Martinis)

வேதியியல் - 3 ஆராய்ச்சியாளர்கள்- சுசுமா கிடகவா (Susumu Kitagawa), ரிச்சர்டு ராப்சன்(Richard Robson), உமர் யாகி. (Omar M. Yaghi)

இலக்கியம் - 1- லாஸ்லோ கிராஸ்னஹோர்கை( Nobel Prize in Literature 2025

(Lászlo Krasznahorkai)

அமைதி - அக்.,10

பொருளாதாரம் - அக்., 13

மீதம் உள்ள 2 நோபல் பரிசு

4 நாட்களாக மருத்துவத்தில் தொடங்கி இயற்பியல், வேதியியல் என பகிர்ந்தளிக்கப்பட்ட நோபல் பரிசு இன்று இலக்கியத்தில் இவர் ஒருவருக்கும் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மீதம் உள்ள 2 நாட்களில் அமைதி, பொருளாதாரம் உள்ளிட்ட பிரிவுகளுக்கு நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட உள்ளன.

========

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in