ஆபரேஷன் அல்மாஸ்’ மூலம் பாக். ராணுவத்தினர் 80 பேர் கொல்லப்பட்டனர் : பலூச் விடுதலை முன்னணி தகவல்..!

இந்த தாக்குதல் சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பாக்கிஸ்தான் ராணுவத்திற்கு பெரும் பின்னடைவு என தகவல் ...
Operation Almas: BLF Claims 80 Pakistani Military Personnel Killed in Gwadar Attack
Operation Almas: BLF Claims 80 Pakistani Military Personnel Killed in Gwadar AttackGoogle
1 min read

பலுசிஸ்தான் தாக்குதல் :

பலூசிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவத்தை குறிவைத்து நடத்தப்பட்டதாக கூறப்படும் ஆபரேஷன் அல்மாஸ் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.

இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் உளவுத்துறையை சேர்ந்த 80-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக பலூச் விடுதலை முன்னணி (BLF) தெரிவித்துள்ளது.

ஆனால், இந்த உயிரிழப்பு எண்ணிக்கையை பாகிஸ்தான் ராணுவம் உறுதிப்படுத்தவில்லை.

குவாதரில் ராணுவ முகாமைக் குறிவைத்து தாக்குதல் :

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் அமைந்துள்ள முக்கிய துறைமுக நகரமான குவாதரில், பாகிஸ்தான் ராணுவத்துடன் தொடர்புடைய Frontier Works Organisation (FWO) முகாமை குறிவைத்து அக்டோபர் 22-ம் தேதி தாக்குதல் நடத்தியதாக BLF தெரிவித்துள்ளது.

வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட வாகனம் மூலம் முகாமின் நுழைவாயில் தகர்க்கப்பட்டு, பின்னர் ஆயுதம் ஏந்திய குழுவினர் உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்தியதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.

80பேர் கொல்லப்பட்டதாக பலூச் விடுதலை முன்னணி தகவல்:

இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ உளவு பிரிவான Military Intelligence (MI), உளவுத்துறையான ISI மற்றும் சிறப்புப் படையான SSG ஆகியவற்றை சேர்ந்த அதிகாரிகள் உட்பட 80-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக BLF கூறியுள்ளது.

மேலும், ராணுவ வாகனங்கள், ஆயுதங்கள் மற்றும் கண்காணிப்பு ட்ரோன்களையும் அழித்ததாக தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை சுமார் 20 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்ததாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது

பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட தகவல் என்ன?

BLF-ன் இந்த கூற்றுக்கு மாறாக, பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகப் பிரிவான ISPR வேறொரு தகவலை வெளியிட்டுள்ளது.

குவாதர் மற்றும் காப் எல்லை பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய நடவடிக்கைகளில் 10 தாக்குதல்தாரிகள் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது.

மேலும், பாதுகாப்புப் படையினருக்கு உயிரிழப்பு ஏற்படவில்லை என்றும், ஒரு பொதுமக்கள் உயிரிழந்ததாகவும் கூறியுள்ளது. இதனால் இரு தரப்பின் தகவல்களுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

சீனா - பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்துக்கு அச்சுறுத்தல்?

குவாதர் துறைமுகம் சீனா பாகிஸ்தான் பொருளாதார வழித்தடமான CPEC திட்டத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது :

அரபிக்கடலை ஒட்டியுள்ள இந்த துறைமுகம் சீனாவின் வர்த்தக மற்றும் பொருளாதார திட்டங்களுக்கு முக்கியமானதாக உள்ளது.

இதற்கிடையே, CPEC உள்ளிட்ட முக்கிய திட்டங்களையும் தொடர்ந்து குறிவைப்போம் என்று BLF எச்சரித்துள்ளது.

=====================