Putin Strikes : உலக அளவில் உயரும் புதினின் செல்வாக்கு! அடிபணிந்த வல்லரசு நாடுகள்..?

உக்ரைன் போர், பொருளாதார தடைகளை கடந்து அமெரிக்கா, சீன தலைவர்களுடன் ஒரே மேடையில் புதின்! மாறுகிறதா உலக அரசியல்...
Putin's Global Influence Rises! Trump & Xi Jinping Share the Stage as Europe Faces Questions
Putin's Global Influence Rises! Trump & Xi Jinping Share the Stage as Europe Faces QuestionsGoogle
1 min read

ரஷ்யாவை தனிமைப்படுத்திய மேற்கத்திய நாடுகள் :

2022-ம் ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததில் இருந்து, அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யாவுக்கு எதிராக பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தன.

ரஷ்யாவின் எண்ணெய் வணிகம், வங்கிப் பரிவர்த்தனைகள், தொழில்நுட்ப இறக்குமதி என பல துறைகளில் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன.

இதன் மூலம் ரஷ்யாவின் பொருளாதாரத்தை பலவீனப்படுத்தி, அந்நாட்டை உலக நாடுகளிடமிருந்து தனிமைப்படுத்துவதே மேற்கத்திய நாடுகளின் நோக்கமாக இருந்தது.

தடைகளை கடந்து வலுப்பெற்ற ரஷ்யா :

ஆனால், இந்த நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ரஷ்யா தனது சீனா, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுடனான வணிக உறவுகளை தொடர்ந்து வலுப்படுத்தி வந்தது.

இதனால் மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகள் ரஷ்யாவை முழுமையாக முடக்கிவிடவில்லை என்ற கருத்தும் உருவாகியுள்ளது.

ஒரே மேடையில் டிரம்ப், ஜி ஜின்பிங், புதின் :

இந்நிலையில், சீனாவில் நடைபெறும் APEC மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் ஒரே மேடையில் தோன்றியுள்ளனர்.

குறிப்பாக, 2017-ம் ஆண்டுக்குப் பிறகு APEC மாநாட்டின் தலைவர்கள் குழுப் புகைப்படத்தில் புதின் மீண்டும் இடம்பெற்றிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

உக்ரைன் போர் தொடங்கிய பிறகு மேற்கத்திய நாடுகளின் கடுமையான எதிர்ப்புகளை சந்தித்து வந்த புதின், தற்போது உலகின் முக்கிய தலைவர்களுடன் ஒரே மேடையில் தோன்றியிருப்பது ரஷ்யாவுக்கு அரசதந்திர ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

குறைகிறதா ஐரோப்பிய நாடுகளின் செல்வாக்கு?

இதற்கிடையே, ஐரோப்பிய நாடுகளுக்கும் புதிய அரசியல் சவால் உருவாகியிருக்கிறது.

இதுவரை உக்ரைனுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த ஐரோப்பிய நாடுகள், தற்போது அமெரிக்காவும் ரஷ்யாவும் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தும் சூழலை உற்றுநோக்கி வருகின்றன.

உக்ரைனின் எதிர்காலம் தொடர்பான முடிவுகளில் ஐரோப்பிய நாடுகளும் உக்ரைனும் புறக்கணிக்கப்படக் கூடாது என்ற கருத்தும் வலுப்பெற்று வருகிறது.

இதனால் உலக அரசியலில் ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்பு குறித்த கேள்விகளும் எழுந்துள்ளன.

ஜெலன்ஸ்கிக்கு பின்னடைவு :

ஒருபுறம் புதின் அமெரிக்க, சீனத் தலைவர்களுடன் ஒரே மேடையில் தோன்றியுள்ள நிலையில், மறுபுறம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு அரசதந்திர ரீதியிலான சவால் ஏற்பட்டுள்ளது.

உக்ரைனின் ஒப்புதல் இல்லாமல் அந்த நாட்டின் எதிர்காலம் தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படக் கூடாது என்பதே ஜெலன்ஸ்கியின் நிலைப்பாடு.

=====================