நுாற்றாண்டை நிறைவு செய்த ரேடியோ சிலோன் - குவியும் வாழ்த்து!

Radio Ceylon Turns 100 : நம் நாட்டில், 'ரேடியோ சிலோன்' என்று மிகவும் பிரபலமாக அறியப்பட்ட இலங்கை வானொலி சேவை நுாற்றாண்டை நிறைவு செய்துள்ளது. இதற்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.
Radio Ceylon turns 100 Sri Lankan radio that became India's destination for Bollywood songs with Binaca Geetmala
Radio Ceylon turns 100 Sri Lankan radio that became India's destination for Bollywood songs with Binaca GeetmalaRadio Ceylon
1 min read

இலங்கை ரேடியோ சிலோன் தோற்றம்

Radio Ceylon Turns 100 : நம் அண்டை நாடான இலங்கையில், 1925 டிச., 16ல், இலங்கை வானொலி சேவை துவங்கப்பட்டது. இது, ஆசியாவின் முதல் வணிக குறுகிய அலை வானொலி நிலையம். இந்த வானொலி சேவை, 1949 அக்., 1ல், 'ரேடியோ சிலோன்' என, மறுசீரமைக்கப்பட்டது. தொடர்ந்து, 1967 ஜன., 5ல், 'இலங்கை ஒலிபரப்பு கூட்டமைப்பு' என, பெயர் மாற்றப்பட்டது. இலங்கை வானொலியில், ஆசியாவிலேயே மிகப்பெரிய பதிவு செய்யப்பட்ட பாடல்களின் நுாலகமே உள்ளது.

அமீன் சயானியின்பிரபலமான பினாகா கீத்மாலா நிகழ்ச்சி இதில் ஒலிபரப்பப்பட்டது

இதில் நம் நாட்டில் கூட கிடைக்காத அரிய ஹிந்தி பாடல்களும், உலகத் தலைவர்களின் குரல் பதிவுகளும் தனித்துவமான சேகரிப்புகளாக தற்போது வரை பாதுகாக்கப்பட்டு இருக்கின்றது. இலங்கை வானொலியில், மறைந்த இந்திய வானொலி அறிவிப்பாளர் அமீன் சயானி தொகுத்து வழங்கிய, 'பினாகா கீத்மாலா' நிகழ்ச்சி இதில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். வசீகரக் குரலுக்கு சொந்தக்காரரான அவர், 1952 - 1988 வரை அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார், இவரின் குரலுக்கு அவ்வளவு ஒரு தனி ரசிகர் பெருங்கூட்டமே இருந்த நிலையில், இவர் தொகுத்து வழங்கியதால், ரேடியோ சிலோனில் ஒலிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி பெரும் பிரபலம் வாய்ந்ததும் கூட .

ரேடியோ சிலோனுக்கு குவியும் வாழ்த்து

இந்நிலையில், அன்றயை கால கட்டத்தில் எந்தப் பாடல் தரவரிசையில் முதலிடம் பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர் மக்களிடையே நிலவி வந்தது. இத்தகயை சிறப்புகளை பெற்ற இந்த வானொலி சேவை, தற்போது நுாற்றாண்டை நிறைவு செய்துள்ளது. 100 ஆண்டுகள் கடந்துள்ள ரேடியோ சிலோன் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தற்போது சேவைகளை வழங்கி வரும் நிலையில், இதன் நுாற்றாண்டு கொண்டாடத்திற்கு சமூக ஆர்வலர்கள் முதல் உலகெங்கிலும் உள்ள ரேடியோ சிலோன் ரசிகர் வரை வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in