இலவசமாக ரஷ்யாவில் படிக்கலாம் : இந்தியர்களே முந்துங்கள்!

Russia Government Announces Scholarships For Indian Students : வெளிநாட்டில் படிக்கும் ஆர்வம் உள்ள இந்தியர்களுக்கு ரஷ்யா தலைநகர் மாஸ்கோவ சிறந்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
Russia Government Announces Scholarships For Indian Students Without Requiring Entrance Examinations News in Tamil
Russia Government Announces Scholarships For Indian Students Without Requiring Entrance Examinations News in TamilGoogle
1 min read

படிப்பிற்கு ஆர்வம் காட்டும் ரஷ்யா

Russia Government Announces Scholarships For Indian Students : வெளிநாடுகளில் படிக்கும் கனவு பலருக்கு இருந்தாலும் அதை நடைமுறை படுத்தமுடியாமல் கிடைத்த படிப்புகளை படிப்பதுண்டு. ஆனால் ரஷ்யா ஒரு நற்செய்தியைச் சொல்லியிருக்கிறது.

இந்திய மாணவர்களைத் தங்கள் நாட்டுக்கு வந்து படிக்க வைப்பதில் ரஷ்யா, குறிப்பாகத் தலைநகர் மாஸ்கோ, தற்போது அதிக ஆர்வம் காட்டி வருகிறது.

ரஷ்யாவில் இந்தியர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பு

மாஸ்கோ நகரில் உள்ள உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களில், இந்திய மாணவர்கள் ஸ்காலர்ஷிப் (Scholarship) மூலம் படிப்பதற்கான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.

கல்விக்கான கதவுகள் திறப்பு

அதாவது, சமீபத்தில் நடந்த கல்வி தொடர்பான மாநாட்டில் பேசிய மாஸ்கோ நகர அதிகாரிகள், “இந்திய மாணவர்களுக்கு ரஷ்யாவில் உயர்கல்வி கற்பதற்கான கதவுகள் அகலத் திறக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளனர்.

ரஷ்யாவில் பல்வேறு படிப்புகள்

குறிப்பாக, மாஸ்கோ அரசு சார்பில் வழங்கப்படும் மானியங்கள் (Grants) மற்றும் கல்வி உதவித்தொகை மூலம், இந்திய மாணவர்கள் கல்விக் கட்டணமே இல்லாமல் அல்லது மிகக் குறைந்த செலவில் படிக்க முடியும்.

ரஷ்யா என்றாலே நம் ஊர் மாணவர்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது மருத்துவப் படிப்புதான் (MBBS).

ஆனால், அதையும் தாண்டி, செயற்கை நுண்ணறிவு (AI), விண்வெளி ஆராய்ச்சி (Space Science), அணுசக்திப் பொறியியல் (Nuclear Engineering), தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ரஷ்யப் பல்கலைக்கழகங்கள் உலக அளவில் சிறந்து விளங்குகின்றன. இந்தப் படிப்புகளுக்குத் தற்போது இந்திய மாணவர்களிடையே டிமாண்ட் அதிகரித்துள்ளது.

ரஷ்யா செல்வதற்கான காரணம்

செலவு குறைவு: அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடும்போது ரஷ்யாவில் தங்குமிடம் மற்றும் உணவுச் செலவு மிகவும் குறைவு.

நட்புறவு: இந்தியாவும் ரஷ்யாவும் நீண்ட கால நண்பர்கள் என்பதால், இந்திய மாணவர்களுக்கு அங்குப் பாதுகாப்பு மற்றும் கௌரவம் அதிகம்.

தரமான கல்வி: மாஸ்கோவில் உள்ள பல்கலைக்கழகங்கள் உலகத் தரவரிசையில் முன்னிலையில் உள்ளன.

விண்ணப்பிப்பது எப்படி?

ரஷ்ய அரசின் அதிகாரப்பூர்வக் கல்வி இணையதளங்கள் அல்லது சென்னையில் உள்ள ரஷ்யக் கலாச்சார மையம் (Russian Centre of Science and Culture) மூலமாக இந்த ஸ்காலர்ஷிப் விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

மதிப்பெண் மற்றும் நுழைவுத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

ரஷ்ய மொழி கற்றால் உதவும்

ரஷ்யாவில் குளிர் மைனஸ் டிகிரியில் இருக்கம் என்பதால் குளிரைத் தாங்கும் உடல்வாக்கு உள்ளவர்கள் தாராளமாகப் பறக்கலாம். அதேபோல, ஆங்கில வழியில் பாடம் நடத்தினாலும், ரஷ்ய மொழியை ஓரளவுக்குக் கற்றுக்கொண்டு செல்வது அங்குள்ள மக்களுடன் பழகவும், பார்ட் டைம் வேலை தேடவும் ரொம்பவே உதவும்.

ரஷ்யப் பல்கலைக்கழகங்களின் அட்மிஷன் நடைமுறைகள் மற்றும் ஸ்காலர்ஷிப் குறித்த முழு விவரங்களை education-in-russia.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

=============

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in