

ரஷ்யா அதிபர் புடின் :
உலகின் முக்கிய தலைவர்களுள் ஒருவராக ரஷ்யா அதிபர் புடின் விளங்குகிறார். அதுமட்டுமல்லாமல் அவருடைய சர்வதேச பாதுகாப்பு கொள்கை மற்றும் அவருடைய அரசியல் நகர்வுகளில் உலகில் முக்கிய கவனம் பெரும் நபராக இருந்து வருகிறார் கூடவே அவர் ரஷ்யாவின் நீண்ட கால அதிபராக பணியாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது .
இந்தியாவில் மிகவும் பிரபலமான வெளிநாட்டு அதிபரில் இவரும் ஒருவர் :
இந்தியாவில் புடின் மிகவும் பிரபலமான வெளிநாட்டு அதிபராவர் ஏனென்றால் அவருடைய வாழ்க்கை வரலாறு மற்றும் அவருடைய முக்கிய சர்வதேச நகர்வுகள், அதேபோல அவரின் கடந்த கால வேலை இவையெல்லாம் இந்தியா சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது அவர் இந்தியா வரும்பொழுது நல்ல வரவேற்பையும் இங்கு உள்ள மக்களால் கொண்டாடப்பட்டு வரும் என்பது குறிப்பிடத்தக்கது .
உலகின் முக்கிய பொருளாதார கூட்டமைப்புகளில் ஒன்றாக வளர்ந்துள்ள BRICS மாநாட்டில் ரஷ்யாவின் பங்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
குறிப்பாக இந்தியா, சீனா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளுடனான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்த ரஷ்யா தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.
2022 முதல் நீடித்து வரும் உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா மீது பல்வேறு மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
இந்த நிலையில் BRICS மாநாட்டில் புதின் பங்கேற்பது, உலக அரங்கில் ரஷ்யாவின் நிலைப்பாட்டை வலுப்படுத்தும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.
புதின், சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் டெல்லி வருகை தருவதால் தலைநகர் முழுவதும் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆயிரக்கணக்கான பாதுகாப்பு பணியாளர்கள், ட்ரோன் கண்காணிப்பு, சிறப்பு பாதுகாப்பு வளையங்கள் உள்ளிட்ட ஏற்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
BRICS மாநாட்டின் ஓரமாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிபர் புதின் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தைகளும் நடைபெற வாய்ப்புள்ளது.
எரிசக்தி, பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடு உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளின் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதின், ஜின்பிங், மோடி உள்ளிட்ட தலைவர்கள் ஒரே மேடையில் பங்கேற்கும் இந்த BRICS மாநாடு, உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
இதனால் சர்வதேச ஊடகங்களின் பார்வையும் தற்போது டெல்லி மீது திரும்பியுள்ளது.
=============