Singapore Will Ban Smartphone Smart Watch Devices Use in Secondary Schools From January 2026
Singapore Will Ban Smartphone Smart Watch Devices Use in Secondary Schools From January 2026Google

ஸ்மார்ட் போன், வாட்ச் பள்ளிகளில் பயன்படுத்த தடை : சிங்கப்பூர்!

Smartphone Smart Watch Use Ban in Singapore : சிங்கப்பூரில், பள்ளி நேரங்களில், 'ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் வாட்ச்' பயன்படுத்த மாணவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.
Published on

மாணவர்கள் மூழ்கின்றனர்

Smartphone Smart Watch Use Ban in Singapore : பொதுவாக கொரோனா பாதிப்பிற்கு பிறகு, ஆன்லைன் பாடம் என்ற படிப்பின் வாயிலாக 5 வயது குழந்தை முதல் கல்லூரி மாணவன் வரை மொபைல் போன் என்பது, படிப்பிற்கு ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளது.

இதனால், படிப்பினை அலைபேசியோ, டிஜிட்டல் ஸ்கீரினிங் மூலம் ஏதோ ஒன்றோ இருந்தால் தான் படிப்பு சரி என்ற அளவிற்கு அவர்கள் சிந்தை மாறி, கையில் புத்தகம் என்பது மறைந்துள்ளது.

கொரோனாவுக்கு பிறகு வழக்கம்போல் பள்ளி கல்லூரிகள் இயங்கினாலும், கையில் தொட்ட அந்த டிஜிட்டல் மூழ்கியை இன்றளவும் யாரும் வைக்கவில்லை.

புது புத்தகம், புதிய தாள்களுடன் அப்படியே தான் இருக்கிறது. இந்நிலையில் இந்த அலைபேசி மற்றும் டிஜிட்டல் ஸ்கீரினிங் பொருள்கள் தொடர்ந்து மாணவர்களை ஆட்கொண்டு வருவதால், ஒரு சில நாடுகள் அதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பது, சில நாடுகள் சமூக வலைதளங்களை முடக்குவது என மொத்தமாக வளர்ந்து வரும் பதின்பருவத்தினர் அனைவருக்கும் முட்டுக்கட்டை போடப்பட்டு வருகிறது.

அயல்நாடுகளின் அலைபேசி தடுப்பு முயற்சி

இதைப்போல், சமூக வலைதளங்களில் மூழ்கிக் கிடப்பதால், சிறாருக்கு உடல்நலம் மற்றும் மனநலம் பாதிக்கப்படுவதாக பல்வேறு நாடுகளும் கவலை தெரிவித்து உள்ளன. லாக்கர் அவர்களை பாதுகாக்க, முதல் நாடாக ஆஸ்திரேலியா, 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதித்துள்ளது. இதைத் தொடர்ந்து, டென்மார்க், நார்வே, மலேஷியாவிலும் தடை விதிக்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூரில் கல்வி அமைச்சகம்

இந்நிலையில், தென் கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரின் கல்வி அமைச்சகம், நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் வரும் 2026 ஜன,1 முதல், மே ல்நிலைப் பள்ளிகளில், பள்ளி நேரங்களில், ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் வாட்ச் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது.

இதன்படி, இடைவேளைகளில் அவற்றை பயன்படுத்தக் கூடாது. பள்ளிக்கு வந்ததும், மாணவர்கள் தங்களது ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் வாட்சுகளை லாக்கர்களில் வைக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.

அலைபேசி தடைக்கு சிங்கப்பூர் பெற்றோர்கள் வரவேற்பு

வரவேற்பு தேவைப்படும் சமயங்களில் அவற்றை பயன்படுத்த பள்ளி நிர்வாகம் அனுமதிக்கும் மாணவர்களின் கற்றல் ஈடுபாட்டை அதிகரிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.

சிங்கப்பூரில், துவக்கப் பள்ளிகளில் இந்த தடை ஏற்கனவே உள்ள நிலையில், தற்போது மேல்நிலைப் பள்ளிகளிலும் நீட்டிக்கப்பட்டதற்கு பெற்றோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

பல்வேறு நாடுகள் மாணவர்களின் படிப்பினைக்காக புதுவித முயற்சிகளை தொடுத்து வருகிறது, இதைப்போல் இந்த பட்டியில் இன்னும் எத்தனை நாடுகள் இணையும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

logo
Thamizh Alai
www.thamizhalai.in