அரிதாக நிகழும் அபூர்வ நிகழ்வு
Six Planets Alignment 2026 Date and Time in Tamil : சூரியக் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு கோளும் சூரியனைச் சுற்றி வருவது தெரிந்த ஒன்றே .அதன்படி பூமி ஒரு முறை சூரியனை சுற்றிவர 365 நாட்களாகின்றன.
அந்த வகையில் கோள்களின் சுற்று வட்டப் பாதையில் ஒன்றை ஒன்று சந்திக்கும் அபூர்வ நிகழ்வுகள் அவ்வப்போது மட்டுமே நிகழும் .
கடந்த ஆண்டு ஏற்பட்ட நிகழ்வு
அதன்படி, 6 கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் அணிவகுத்து வரும் அரிய நிகழ்வானது கடந்த ஆண்டு ஜனவரி 22-ம் தேதி நடந்தது.
இந்த ஆண்டு எப்போது நிகழும்
இந்த ஆண்டிற்கான இந்த நேர்க்கோட்டு சந்திப்பு நிகழ்வானது 2 முறை ஒரே நேர்க்கோட்டில் வரவுள்ளன.
அதன்படி, வெள்ளி, வியாழன், சனி, செவ்வாய், நெப்டியூன் மற்றும் யுரேனஸ் ஆகிய 6 கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் பிப்.28ம் தேதி தென்பட உள்ளன.
வெறும் கண்களால் காண முடியுமா
வெள்ளி, வியாழன், சனி மற்றும் செவ்வாய் கோள்களை பார்க்கலாம் என்றும் ,நெப்டியூன் மற்றும் யுரேனஸை மிகவும் சக்திவாய்ந்த தொலைநோக்கிகளால் மட்டுமே காண முடியும்.
சிறப்பு ஏற்பாடு
அறிவியல் அமைப்புகள் சார்பில் இந்நிகழ்வை காண நாடு முழுவதும் சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து வானிலை ஆய்வாளர்கள் கூறும்போது, ‘‘கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் வரவில்லை. பூமியில் இருந்து பார்க்கும் போது இந்தக் கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் இருப்பது போல ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்தனர் .