பிரமிக்க வைக்கும் பூமியின் புகைப்படங்கள் : விண்வெளியில் படம் பிடித்த ஆர்டெமிஸ்-2 வீரர்கள் : படத்தை பகிர்ந்த நாசா!

நாசாவின் Artemis 2 விண்கலம் மூலம் நிலவை நோக்கிப் பயணிக்கும் விண்வெளி வீர்களான கிரிஸ்டினா கோச் மற்றும் ரீட் வைஸ்மேன் ஆகியோர் எடுத்த பூமியின் பிரமிக்க வைக்கும் புகைப்படங்களை நாசா பகிர்ந்துள்ளது
Stunning photo of Earth: Artemis-2 astronauts captured from space: NASA shares photo
Stunning photo of Earth: Artemis-2 astronauts captured from space: NASA shares photo google
1 min read

பூமியின் பிரமிக்க வைக்கும் புகைப்படம்

நாசாவின் Artemis 2 விண்கலம் மூலம் நிலவை நோக்கிப் பயணிக்கும் விண்வெளி வீர்களான கிரிஸ்டினா கோச் மற்றும் ரீட் வைஸ்மேன் ஆகியோர் எடுத்த பூமியின் பிரமிக்க வைக்கும் புகைப்படங்களை நாசா பகிர்ந்துள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க 2 (Artemis II) விண்கலம்

நாசாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆர்டெமிஸ் 2 (Artemis II) விண்கலம், 50 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவைச் சுற்றி வர மனிதர்களை ஏற்றிச் செல்லும் முதல் பயணமாக நான்கு விண்வெளி வீரர்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது குறிப்பிடத்தக்கது

நிலவின் மறுபக்கத்தை காட்டும் Artemis II

நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் நாசாவின் நீண்டகால வெற்றி திட்டமான 'ஆர்டெமிஸ்' வரிசையில், ஆர்டெமிஸ்-2 விண்கலம் தற்போது வெற்றிகரமாக நிலவை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது.

சுமார் ரூ.8.64 லட்சம் கோடி மதிப்பிலான இந்தத் திட்டத்தில், விண்வெளி வீரர்கள் எடுத்துள்ள பூமியின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இதனை மூலம் நிலவின் மறுபக்கத்தை மிக நெருக்கமாகவும் , நேரடியாகவும் காணும் முதல் வீர்கள் என்ற சிறப்பை பெற உள்ளனர்

50 ஆண்டுகளுக்கு பிறகு : மனிதரால் எடுக்கப்பட்ட பூமியின் புகைப்படம்

ஓரியன் (Orion) விண்கலத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படங்கள், 50 ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வளவு தொலைவிலிருந்து மனிதர்களால் எடுக்கப்பட்ட முதல் புகைப்பட பதிவாகும்

விண்கலத்தின் சூரிய மின்தகடு சிறகுகளில் (Solar array wings) பொருத்தப்பட்ட கேமரா, விண்வெளியின் அடர்ந்த இருளில் பூமி ஒரு மெல்லிய வெள்ளிப் பிறையைப் போல காட்சியளிப்பதைப் படம் பிடித்துள்ளது மிக சிறப்புமிக்க ஒன்றாக பார்க்கப்டுகிறது.

பூமியின் பிரமிக்கத்தக்க புகைப்படம்

விண்கலத்தின் ஜன்னல் வழியாக எடுக்கப்பட்ட உயர்-திறன் (High-resolution) புகைப்படத்தில், பசிபிக் பெருங்கடலின் அடர் நீல நிறமும், வெண்மையான மேகக்கூட்டங்களும் மிகத் துல்லியமாகத் அப்புகைப்படத்தில் தெரிகிறது. வீர்கள் எடுத்த பூமியின் பிரமிக்கமான புகைப்படத்தை நாசா பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in