

நவீன உலகின் போன்கள்
new retro landline முன்னொரு காலத்தில், மின்சாரம் என்பதே இல்லாமல் நம் மூத்த சந்ததியினர் வாழ்ந்து வந்தனர் என்று நாம் நம் காதுபட கேட்டிருப்போம். அதிலும் நாட்கள் மாற மாற, அவரவர்கள் வதிக்கேற்ப இந்த மின்சாரம், தொலைக்காட்சி, மொபைல்போன் என உபயோகித்து வந்ததையும் கூறியிருப்பார்கள்.
ஆனால், இன்றைய காலகட்டத்தில் சிறுவயது குழந்தைக்கு உணவு ஊட்டுவது முதல் அதை உறங்கவைப்பது வரை நிலாவை காட்டியோ, வேடிக்கை காட்டியோ எதையும் செய்வதில்லை, ஒரே ஒரு மொபைல் போன் தான், குழந்தையின் அழுகுரல் நிறுத்தி அனைப்பது வரை பெற்றோர்கள் எளிதாக குழந்தையை தன்வசப்படுத்துவது என்று பெற்றோர்களின் நண்பனே இந்த மொபைல் போன். காலகட்டங்கள் நவீனம் என்று இன்றைய வளர்ச்சி, உச்சம் தொட்டு கொண்டிருக்கும் நிலையில், மீண்டும் நம்மை பழைய நினைவுக்கு, இந்த மாடர்ன் டிஜிட்டல் உலகத்தில் மொபைலின் மூலமே அழைத்து சென்றுள்ளார், அமெரிக்க பெண் தொழில்முனைவோர் கேட் கோட்சே.
லேண்ட் லைன் ஃபோனை அறிமுகப்படுத்திய கேட்கோட்சே
அப்படி இருக்கையில், அமெரிக்காவைச் சேர்ந்த பெண் தொழில்முனைவோரான கேட் கோட்சே என்பவர், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன், லேண்ட் லைன் போனை அறிமுகப்படுத்தி உள்ளார். இந்த போன், சமூக ஊடகங்கள் மற்றும் கவன சிதறல்களை தவிர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 'பிசிக்கல் போன்ஸ்' என அழைக்கப்படும் இந்த சாதனத்தில், 'வாட்ஸாப், இன்ஸ்டாகிராம், பேஸ்டைம்' போன்ற செயலிகளின் இணைய அடிப்படையிலான அழைப்புகளை பெற முடியும்.
கேட்கோட்சே பதில்
இது குறித்து, கேட் கோட்சே இது ஒரு ரெட்ரோ பாணி லேண்ட் லைன் போன். இதில், 'புளூடூத்' வசதியும் உள்ளது. இதன் மூலம் ஸ்மார்ட் போனுடன் எளிதாக இணைக்க முடியும். பிசிக்கல் லேண்ட் லைன் போனை ஆன் செய்ததும், ஸ்மார்ட் போனின் புளூடூத் அமைப்பில், அதை தேர்ந்தெடுத்து இணைக்க வேண்டும். இதன்பின் ஸ்மார்ட் போனுக்கு வரும் அழைப்புகளை பிசிக்கல் போன் வழியாக பயன்படுத்தலாம்.
மொபைல் போன் பயன்பாட் டை குறைக்க இது உதவும். இவ்வாறு அவர் கூறினார். கடந்த ஜூலையில் ஆன்லைன் வாயிலாக அறிமுகம் செய்யப்பட்ட இந்த சாதனத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக கேட் கோட்சே தெரிவித்துள்ளார். இன்றைய காலத்தில் ரெட்ரோ லேண்ட் லைனை இன்றைய டிஜிட்டல் உலகில் புதுவித முனைப்புகளுடன் மக்களை குதூகளித்துள்ள இவரின் இந்த புதிய பிசிக்கல் லேண்ட் லைன் உருவாக்கத்திற்கு உலகளவில் பலரும் சமூக வலைதளங்களில் தங்களது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றனர்.