அமெரிக்க தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு - 4 பேர் பலி!

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தின் உள்ள மோர்மன் தேவாலாயத்தில், துப்பாக்தேவைகி சூடு நடத்திய ஒருவரை அமெரிக்க காவல்துறையினர் சுற்றி வளைத்து சுட்டுக்கொன்றனர்.
Shooting at US church leaves 4 dead!
Shooting at US church leaves 4 dead!
1 min read

பாதுகாப்பு கேள்வி குறியில் அமெரிக்கா

Three dead in US church shooting. Police kill shooter அமெரிக்காவில் அவ்வப்போது வன்முறை சம்பங்கள் நடக்கும். ஆனால், சமீபகாலமாக தொடர்ந்து நாளுக்கு நாள் அரங்கேறி கொண்டு இருக்கிறது. இதற்கு சான்றாக சில நாட்களுக்கு முன் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீதே துப்பாகி சூடு முயற்சி நடத்தப்பட்டு, அவர் நூழிலையில் உயிர் தப்பினார். இதனால், அமெரிக்காவின் பாதுகாப்பு மிகப்பெரிய கேள்வி குறியாக இருக்கிறது என உலகின் சமூக ஆர்வலர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பலரும் தங்களது கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.

தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு

இந்நிலையில், தற்போது மிச்சிகன் மாகாணத்தின் கிராண்ட் பிளாங்க் பகுதியில் உள்ள மோர்மன் தேவாலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது, கூட்டத்தில் இருந்த ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தி தேவாலயத்திற்கும் தீவைத்துள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்ததையடுத்து, 8க்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், துப்பாக்கிச்சூடு நடத்தியவரை சுற்றிவளைத்து சுட்டுக்கொன்றனர். இதைத்தொடர்ந்து, படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

டிரம்ப் பதிவு

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு அதிபர் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்ததையடுத்து, கிறிஸ்துவர்கள் மீது குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என்றும், நமது நாட்டில் இந்த வன்முறை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in