இந்திய தேர்தல் முறையை பாராட்டி தள்ளிய டிரம்ப் : அமெரிக்காவில் கட்டாயமாகும் வாக்காளர் அட்டை..!

அமெரிக்காவில் வாக்காளர் அடையாள அட்டை கட்டாயமாக்கும் விவாதம் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்திய தேர்தல் முறையை எடுத்துக்காட்டி டிரம்ப் பாராட்டு...
Trump Cites India's Electoral System: New Debate Emerges in the United States...
Trump Cites India's Electoral System: New Debate Emerges in the United States...Ai Generated
1 min read

இந்தியாவை பாராட்டிய டிரம்ப் :

அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் பேசுகையில் அவர் இந்தியா தேர்தல் ஆணையத்தையும் மற்றும் அதன் செயல்பாடுகளையும் நாம் பாராட்டியே ஆகா வேண்டும் எனவும் ஏனென்றால் இந்தியா போன்ற பெரிய ஜனநாயகமாக நாட்டில் தேர்தலை எந்த ஒரு குழப்பும் இன்றி அவர்கள் நடத்துவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

SAVE America Act”என்ற திட்டத்திற்கு ஆதரவு திரட்டுவதாக தெரிவித்தார் :

அமெரிக்காவில் தேர்தல் நடைமுறைகளை மேலும் கடுமையாக்க வேண்டும் என்ற விவாதம் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தியாவின் தேர்தல் முறையை உதாரணமாகக் காட்டி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது நிலைப்பாட்டை வலியுறுத்தியுள்ளார்.

இதற்காக அவர் முன்வைக்கும் “SAVE America Act” சட்டத்துக்கு ஆதரவு திரட்டும் முயற்சியும் வேகமடைந்துள்ளது :

கடுமையான விதிமுறைகள் கொண்டு வரவேண்டும் என டிரம்ப் வலியுறுத்தல் :

அமெரிக்க தேர்தல் நடைமுறையில் தற்போது ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனி விதிமுறைகள் உள்ளன. குறிப்பாக வாக்களிக்கும்போது எந்த வகையான அடையாளச் சான்று காட்ட வேண்டும், அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கான நடைமுறை என்ன போன்ற விஷயங்களில் மாநிலங்களுக்கு இடையே வேறுபாடுகள் காணப்படுகின்றன.

இந்தியாவை எடுத்துக்காட்டாக குறிப்பிட்ட டிரம்ப் :

இந்த விவகாரத்தில் இந்தியாவை எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்ட டிரம்ப், இந்தியாவின் சமீபத்திய மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய அளவில் மக்கள் வாக்களித்ததாகவும், அஞ்சல் வாக்குகளின் பங்கு மிகவும் குறைவாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், வாக்காளர்கள் செல்லுபடியாகும் புகைப்பட அடையாள ஆவணத்தை வைத்திருக்க வேண்டிய நடைமுறை இந்தியாவில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவுக்கான இந்திய தூதர் செர்ஜியோ கோரும் :

இதற்கிடையில், அமெரிக்காவுக்கான இந்திய தூதர் செர்ஜியோ கோரும் டிரம்பின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்திய தேர்தலில் கோடிக்கணக்கான மக்கள் பங்கேற்ற போதிலும், ஒவ்வொரு வாக்காளருக்கும் அடையாளச் சான்று தொடர்பான நடைமுறை இருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

அமெரிக்கா தேர்தல் வரலாற்றில் ஒரு மாற்றமாக இருக்கும் :

இந்த முன்மொழிவுக்கு ஆதரவாளர்கள், தேர்தல் முறையில் நம்பகத்தன்மையை அதிகரிக்க அடையாளச் சரிபார்ப்பு அவசியம் என்று வாதிடுகின்றனர். வாக்களிப்பது நாட்டின்எதிர்காலத்தை உருவாக்கும் மிக முக்கியமான குடிமக்கள் உரிமை என்பதால், உண்மையான தகுதியுடையவர்கள் மட்டுமே வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பது அவர்களின் நிலைப்பாடு.

logo
Thamizh Alai
www.thamizhalai.in