இந்திய பொருட்களுக்கு கூடுதாலாக 10% வரி
இந்தியா, வங்கதேசம் , இங்கிலாந்து ,பாகிஸ்தான் உள்ளிட்ட 17 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10% கூடுதலாக வரி விதிக்கப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது
கட்டாயம் உழைப்பு , சட்டங்கள் இயற்றத்தவறியதே முக்கிய காரணம்
கட்டாய உழைப்பின் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களின் இறக்குமதியை தடுத்து நிறுத்த அந்தந்த நாடுகள் முறையான சட்டங்களை இயற்றத்வறியதே இதற்கு முக்கியக் காரணமாக அமெரிக்கா குற்றம்சாட்டுகிறது.
இந்த சூழலிலே இந்தியா உட்பட 17 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 10 சதவீதம் கூடுதல் வரிகளை விதித்துள்ளது.
இது குறித்து அமெரிக்க தெரிவித்துள்ளதாவது
வர்த்தகச் சட்டத்தின் 301ம் பிரிவின் கீழ் இந்தியா, இங்கிலாந்து, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட 17 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 10 சதவீ வரி விதித்து அமெரிக்கா அறிவித்து உள்ளது.
முன்னதாக, இந்தியா 12.5 சதவீத வரி விதிக்கப்படும் நாடுகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தது ல்குறிப்பிடத்தக்கது
அதன்படி 10 % அமெரிக்க வரி விதித்துள்ள நாடுகள்
அமெரிக்காவின் 10% சதவீத வரிவிதிப்பானது அர்ஜென்டினா,
.வங்கதேசம்,.பிரிட்டன்,.கம்போடியா,கனடா,.ஈக்வடார்,.சால்வடார்,குவாத்தமாலா,ஹோண்டுராஸ்,.இந்தியா,.இந்தோனேசியா,.ஜோர்டான்,.மலேசியா அகிய நாடுகளுக்கு விதிக்கப்பட்டுள்ளது
இந்த வரி விதிப்பு குறித்து அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர் கூறும்போது
அமெரிக்கா கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டாக கட்டாய உழைப்பு இறக்குமதித் தடையைக் கொண்டுள்ளதுடன், அதை கடுமையாக அமல்படுத்துகிறது.
இது மனித உரிமை மீறலாகவும், வர்த்தகத்தைச் சிதைக்கும் நடைமுறையாகவும் உள்ள இதைச் சரிசெய்து, உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் நலனை மேம்படுத்துவதற்கு இன்றைய நடவடிக்கை முக்கியமான ஒன்றாகும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
இந்திய ஏற்றுமதியில் பாதிப்பு
அமெரிக்காவில் இந்த வரி விதிப்பால் , இந்தியாவில் ஏற்றுமதியில் பாதிப்பானது ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
================