வரி விதிப்பை திரும்ப பெற வேண்டும்: டிரம்புக்கு எம்.பி.க்கள் கடிதம்

அதிபர் டிரம்பின் வரி விதிப்பு உலக நாடுகளில் பிரதிபலிக்கப்பட்டு பொருளாதார சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.இதனால் இந்தியாவிற்கு அரங்கேறியுள்ள சிக்கல் குறித்து அதிபர் டிரம்புக்கு எம்பிக்கள் கடிதம் எழுதியுள்ளனர்
US MPs Letter To Donald Trump Of US Tariff on India Should Withdrawals
US MPs Letter To Donald Trump Of US Tariff on India Should Withdrawals
1 min read

டிரம்பின் வரி விதிப்பின் பிரதிபலிப்பு :

US MPs Letter To Donald Trump Tariff on India : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், வேறு எந்த நாட்​டுக்​கும் இல்​லாத வகை​யில் இந்​திய பொருட்​களுக்கு 50% வரி விதித்​துள்​ளார். இதனால் இரு நாடு​களுக்​கிடையே வர்த்தகம் நடைபெறுவதில் சிக்கல் ஏற்​பட்டு வரு​கிறது. மேலும் இந்தியாவின் பொருளாதாார முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கும், தங்கம் ,வெள்ளி, உள்ளிட்டவே மீது இதன் தாக்கம் அதிகப்படியாக எதிரொலித்து நாளுக்கு நாள் உச்சத்தை தொாட்டு வருகிறது.

சுதேசி இயக்கத்தில் இந்தியா

அதிபர் டிரம்பின் இந்த வரி விதிப்பால். மொத்த இந்தியாவும் பொருளாதாரத்தில் மட்டுமல்லாது தொழில்நுட்ப வளர்ச்சியிலும் சொந்த தயாரிப்புகளை பயன்படுத்த தொடங்கி சுதேசி இயக்கத்தை ஆதரிக்க தொடங்கியுள்ளது. சுதேசி குறித்து மோடியின் அறிவுறுத்தலின்படி, தொழில்நுட்பங்களின் உபயோகம் சமூக வலைதளம் என அனைத்திற்கும் தனது தயாரிப்புகளுக்குள் குதித்துள்ள இந்தியர்கள், தமிழ்நாட்டை தலைமை இடமாக கொண்டுள்ள ஜோஹோ நிறுவனத்தின் தயாரிப்புகளாக வலம் வந்து கொண்டிருக்கும் வாட்ஸ் அப், இன்ஸ்டகிராமிற்கு பதிலாக அரட்டை செயலியும், கூகுள் குரோமிற்கு பதிலாக உலா என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரை மெயில் ஐடி மாற்றம் என நடைபெற்று வருகிறது.

21 எம்பிக்கள் கடிதம்

இந்​நிலை​யில், தேபோரா ராஸ் மற்​றும் ரோ கண்ணா தலை​மையி​லான அமெரிக்க எம்​.பி.க்​கள் 21 பேர் அதிபர் டிரம்​புக்கு எழு​தி​யுள்ள கடிதத்​தில்(US Lawmakers Letter Donald Trump) ”உலகிலேயே மிகப்​பெரிய ஜனநாயக நாடான இந்​தியா அமெரிக்​கா​வின் நெருங்​கிய கூட்​டாளி​யாக உள்​ளது.

அமெரிக்க நிறு​வனங்​கள் செமிகண்​டக்​டர், சுகா​தா​ரம் மற்​றும் எரிசக்தி துறை​யில் இந்​தி​யாவை மட்டுமே முழுமையாக நம்பி இருக்​கின்​றன. மேலும் சீனா​வின் ஆதிக்​கத்​தைக் கட்​டுப்​படுத்​து​வதற்கு இந்​தி​யா​வின் நட்பு தேவை. கூடு​தல் வரி விதிப்​பால் சீனா மற்​றும் ரஷ்​யா​வுடன் இந்​தியா(India Russia Relations) நெருங்கி வரு​கிறது. இது அமெரிக்கா​வுக்கு பாதிப்பை ஏற்​படுத்​தும்.

மேலும் படிக்க : Israel Gaza War Ceasefire: டிரம்ப், நெதன்யாகுவுக்கு மோடி வாழ்த்து

வரிவிதிப்பு திரும்பு பெறல்

எனவே, இந்​தியா மீதான கூடு​தல் வரி விதிப்பை திரும்​பப் பெற வேண்​டும்(US Tariff on India). அத்​துடன் அந்த நாட்​டுட​னான உறவை சரி செய்ய உடனடி​யாக நடவடிக்கை எடுக்க வேண்​டும்” என்று தெரிவித்துள்ளனர். இந்தியாவின் நிலமை அறிந்து அமெரிக்க எம்பிக்கள், டிரம்புக்கு கடிதம் எழுதியுள்ள நிலையில், டிரம்ப் இதனை கவனத்தில் கொண்டு வரி விதிப்பை திரும்ப பெறுவாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in