மீண்டும் 7 நாடுகளுக்கு அமெரிக்கா தடை : டோனால்ட் டிரம்ப் அதிரடி!

Donald Trump Travel Ban Countries List 2025 : சிரியா, மாலி உள்ளிட்ட 7 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் வர தடை விதித்து அந்நாட்டு அதிபர் டோனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
US President Donald Trump issues new travel ban on 7 More countries To Americans See What Are The Country
US President Donald Trump issues new travel ban on 7 More countries To Americans See What Are The CountryGoogle
1 min read

அதிபர் டிரம்ப்பின் நிலைப்பாடு

Donald Trump Travel Ban Countries List 2025 : அமெரிக்க அதிபராக டிரம்ப் தற்போது பல்வேறு விமர்சனங்களையும், கண்டனங்களையும் தொடர்ந்து வலியுறுத்தி ஏதாவது ஒரு நிகழ்வுகளின் மூலம் சமூக வலைதளங்களில் தன்னை முன்னிறுத்தி வருகிறார்.

டிரம்பின் வரி விதிப்பு

இவரின் வரி விதிப்பால்தான் இந்திய உள்ளிட்ட நாடுகளில் தற்போது தங்கத்தின் விலை விண்ணை முட்டியுள்ளது என்று உலக அரசியல் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.

பகை, நட்பு டிரம்ப் அணுகுமுறை

இதைத்தொடர்ந்து, நியூயார்க் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த மம்தானியின் வெற்றிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அவர், சில நாட்கள் கழித்து அவருடன் நட்பு பாராட்டி இவர் நல்ல மனிதர் என புகாழாரமும் சூட்டி இருந்தார்.

நிலைப்பாட்டில் திடீர், திடீர் மாற்றம்

அரசியல் நகர்வுகளாக இருந்தாலும், டிரம்பின் தொடர்ச்சியான நிலைப்பாடற்ற தன்மை அவரின் மீது ஒரு கேள்வியை உண்டாக்குகிறது என்று அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுத்து வருகின்றனர்.

நாடுகளுக்கு தடை விதித்த டிரம்ப்

இதன்தொடர்ச்சியாக, அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அதிகமாக குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதாக அமெரிக்கா அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டினார். இதனால் பல்வேறு நாடுகளுக்கு வரி விதிப்பு உள்ளிட்ட நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்.

7 நாடுகள் மீது தடை

நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை காரணம் காட்டி, மேலும் 7 நாடுகளை சேர்ந்த வெளிநாட்டினருக்கு நுழைய தடை விதிக்கும் பிரகடனத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்.

அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகள்:

1. சிரியா 2. புர்கினா பாசோ 3. மாலி 4. நைஜர் 5.தெற்கு சூடான் 6. லாவோஸ் 7. சியரா லியோன் இந்த 7 நாடுகளுக்கு தடை உத்தரவு வரும் ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இதற்கு முன்னதாகவே, அமெரிக்காவுக்குள் நுழைய, ஏற்கனவே தடைசெய்யப்பட்ட நாடுகளின் பட்டியலில் ஆப்கானிஸ்தான், பர்மா, சாட், காங்கோ குடியரசு, ஈக்குவடோரியல் கினியா, * எரித்திரியா, ஹைட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான்,ஏமன், புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான், வெனிசுலா உள்ளிட்ட நாடுகளுக்கும் அதிபர் டிரம்ப் தடை விதித்து இருந்தார்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in