Central Government Employees Switch To ZOHO Mail for Official Purpose To Promote Swedeshi Products in India 
வணிகம்

Zoho: அரசு ஊழியர்கள் ஜோஹோ மெயிலுக்கு மாற்றம்: அசத்திய மத்திய அரசு!

Central Government Employees Switch To ZOHO Mail : சுதேசி திட்டத்தை ஆதரிக்கும் வகையில், மத்திய அரசின் அலுவலகங்களில் ஊழியர்கள் அனைவரும் தனது மின்னஞ்சலை ஜோஹோவிற்கு மாற்றியுள்ளனர்.

Bala Murugan

ஜோஹோ மெயிலுக்கு மாற்றம்

Central Government Employees Switch To ZOHO Mail : மத்திய அரசின் சுமார் 12 லட்சம் ஊழியர்களுக்கான மின்னஞ்சல் சேவை, தேசிய தகவல் மையத்திடமிருந்து (NIC) தமிழ்நாட்டின் ஜோஹோ கார்ப்பரேஷனுக்கு மாற்றப்பட்டுள்ளது. தரவுப் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த 7 ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

முக்கிய நகர்வு

ஜோஹோ மெயிலுக்கு மாற்றம் பிரதமர் அலுவலகம் (PMO) உட்பட மத்திய அரசின் சுமார் 12 லட்சம் ஊழியர்களுக்கான மின்னஞ்சல் சேவை, தமிழ்நாட்டைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனமான 'ஜோஹோ கார்ப்பரேஷன்' (Zoho Corporation) உருவாக்கிய தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இது பல ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருந்த தேசிய தகவல் மையத்தின் (NIC) மின்னஞ்சல் சேவையை மாற்றியமைக்கும் ஒரு முக்கிய தொழில்நுட்ப மாற்றமாகும்.

மத்திய அரசு உத்தரவு

நாட்டின் சுதேசி இயக்கத்தை தொடர்ந்து ஆதரிக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டு தொழில்நுட்பத்தை ஊக்குவிப்பது மற்றும் பாதுகாப்பான, உள்நாட்டிலேயே உருவான டிஜிட்டல் அமைப்பை உருவாக்குவது என்ற மத்திய அரசின் இலக்கின்படி, ஜோஹோ சேவையைப் பயன்படுத்த மத்திய கல்வி அமைச்சகம் அக்டோபர் 3 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது.

தொடரும் டொமைன்கள்

முன்பு அலுவல் ரீதியான பயன்பாட்டிற்குப் பாதுகாப்பற்றதாகக் கருதப்பட்ட ஓபன் சோர்ஸ் (open-source) கருவிகளையும் ஜோஹோ தொகுப்பு (Zoho suite) தற்போது மாற்றியுள்ளது. 2023 ஆம் ஆண்டில் ஏழு ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ் ஜோஹோவுக்கு இந்த மின்னஞ்சல் சேவைப் பொறுப்பு வழங்கப்பட்டது. எனினும், மத்திய அரசு ஊழியர்களின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிகள் தொடர்ந்து nic.in மற்றும் gov.in என்ற டொமைன்களையே பயன்படுத்தும் என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஸ்ரீதர் வேம்பு உறுதி

தனிப்பட்ட மின்னஞ்சல் மாற்றம் குறித்து சில மத்திய அமைச்சர்கள் எக்ஸ் தளத்தில் அறிவித்திருந்தாலும், அதிகாரப்பூர்வ தகவல்தொடர்புகள் NIC டொமைன்களிலேயே இருக்கும் என்றும், இந்த மாற்றம் தனிப்பட்ட கணக்குகளுக்கு மட்டுமே என்றும் அதிகாரிகள் தெளிபடுத்தியுள்ளனர் என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க : ஜோஹோ இமெயிலுக்கு மாறிய அமித்ஷா - டிரெண்டுக்கு நீங்களும் மாறுங்க!

மேலும், மத்திய அரசின் இந்த மாற்றத்திற்கு தொடர்ந்து நன்றி தெரிவித்து வரும் ஸ்ரீதர் வேம்பு, தனது அரட்டை (Arattai) செயலியின் தனியுரிமை குறித்து எழுந்த கவலைகளுக்குப் பதிலளித்துள்ளார். பின்னர், ஜோஹோ நம்பிக்கையை அடிப்படையாக் கொண்டது என்றும், பயனர் தரவை விளம்பரத்திற்காகப் பயன்படுத்துவதில்லை என்றும் கூறினார். அனைத்து சேவைகளிலும் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் பயனாளர்களுக்கு உறுதியளித்துள்ளார்.