ஏற்ற, இறக்கத்தில் தங்கம் :
Gold Rate Today in Chennai : சர்வதேச நிலவரங்கள் காரணமாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருக்கிறது. இந்த மாதம் தொடர்ந்து அதிகரித்த ஆபரணத் தங்கம், சவரன் ஒரு லட்சத்தை நெருங்கி பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. தீபாவளிக்கு பிறகு ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் தங்கம், நேற்று ஒரே நாளில் இரண்டு முறை என சவரனுக்கு சுமார் 2000 ரூபாய் உயர்ந்தது. இதனால் தங்கம் மீண்டும் ஏறுமுகத்தை நோக்கி திரும்பி விட்டதோ மக்கள் கலக்கமடைந்தனர்.
இன்று காலை சரிந்த தங்கம்
இத்தகைய சூழலில் தங்கம் விலை இன்று காலை குறைந்தது. மக்கள் நகைகளாக வாங்க கூடிய 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 1800 ரூபாய் குறைந்தது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 225 ரூபாய் விலை குறைந்து 11,100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு சவரன் 90,600 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 1800 ரூபாய் விலை சரிந்து ஒரு சவரன் 88,800 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
13 நாட்களில் ரூ.9,000 சரிவு
தங்கம் விலை கடந்த 17ஆம் தேதி 97,000 கடந்து உச்சத்தை எட்டிய நிலையில் அதில் இருந்து சுமார் 9000 ரூபாய் வரை சரிந்துள்ளது. 24 கேரட் தங்கம் கிராமுக்கு 246 ரூபாய் குறைந்து 12,109 ரூபாய்க்கும் ஒரு சவரனுக்கு 1968 ரூபாய் குறைந்து 96,872 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 கேரட் தங்கம் ஒரு கிராம் 190 ரூபாய் விலை குறைந்து 9,260 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1520 ரூபாய் சரிந்து 74,080 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
வெள்ளி விலையும் குறைவு
தங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் விலையும் இன்று குறைந்தது கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 165 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 1000 ரூபாய் விலை குறைந்து 1, 65,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
மேலும் படிக்க : Gold Rate Today: உச்சம் தொடும் தங்கம் விலை - அதிர்ச்சியில் மக்கள்!
தங்கம் மீண்டும் உயர்வு
இதனால் சாமான்ய மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில், இன்று மாலை சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.90,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. vஎள்ளி விலை கிராமுக்கு ரூ.200 உயர்ந்து, ரூ.11,300க்கு விற்பனையாகிறது.
======