தங்கத்தால் தொடரும் குழப்பம் :
Gold Silver Rate Today in Chennai : தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தினசரி ஏற்ற இறக்கத்துடன் தொடர்ந்து வருவதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகி வருகின்றனர். கடந்த 3 மாத காலமாக இதுவரை இல்லாதவரை தங்கத்தின் விலை விண்ணை முட்டியுள்ளது. இது பொதுமக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், அவ்வப்போது விலை சற்று குறையவும் செய்வதால், பொதுமக்கள் பெருமூச்சுவிட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்றைய தங்கத்தின் மற்றும் வெள்ளி விலையை பார்க்கும்பொழுது, வெள்ளி விலையில் எந்த மாற்றமில்லை என்றாலும், முன்னாளில் இருந்தது போல், ஒரு கிராம் வெள்ளி 150 ரூபாய்க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
இன்றைய தங்க விலை நிலவரம் (25-09-2025) :
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலை இல்லாமல் நகர்ந்து வருகிறது. இது இயல்பான ஒன்றாக இருந்தாலும், கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த வண்ணமே காணப்படுவது மிகையாகது. கடந்த திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்கிழமைகளில் காலை, மாலை என இருவேளையில் தங்கம் விலை உயர்ந்து சவரன் ரூ.85,120-க்கு விற்பனையானது. இதனை தொடர்ந்து நேற்று தங்கம் விலை சற்று குறைந்தது. கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,600-க்கும் சவரனுக்கு 320 ரூபாய்(Gold Rate Today) குறைந்து ஒரு சவரன் ரூ.84,800-க்கு விற்பனையானது.
தொடரும் தங்கத்தின் விலை உயர்ச்சி
இந்நிலையில், இன்றும் இரண்டாவது நாளாக தங்கம் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு 90 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,510-க்கும் சவரனுக்கு 720 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.84,080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 150 ரூபாய்க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
தங்கத்தின் கடந்த 5 நாட்கள் நிலவரம் :
கடைசி ஐந்து நாட்களாக தங்கம் விலை நிலவரம்:-
24-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.84,800 -க்கும், 23-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.85,120-க்கும், 22-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.83,440-க்கும், 21-09-2025- ஒரு பவுன் (22 காரட்) 82,320 ரூபாய்க்கும், 20-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.82,320 என இருந்து வரும் நிலையில் கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரத்தை பொருத்தமட்டில் 24-09-2025- ஒரு கிராம் ரூ.150 23-09-2025- ஒரு கிராம் ரூ.150 22-09-2025- ஒரு கிராம் ரூ.148 21-09-2025- ஒரு கிராம் ரூ.145 20-09-2025- ஒரு கிராம் ரூ.145 வரை விற்பனையாகி வருகிறது.
மேலும் படிக்க : Gold Price : உச்சத்தில் சென்ற தங்கம் விலையில் திடீர் மாற்றம்..!
தங்கம் மற்றும் வெள்ளியின் தொடர் ஏற்றத்திற்க்கு தங்கம் வெள்ளி வணிகர்கள் பல தரபட்ட கருத்துகளை கூறிவந்தாலும், பொதுமக்கள் மற்றும் நடுத்தரவாசிகள் ஏற்றத்தை கண்டு திகைப்பு அடைந்து வருகின்றனர்.