50 கோடி பயன்படுத்தும் யுபிஐ
Indian Overseas Bank to Launch UPI 123PAY Service : நம் நாட்டில் அண்மையில் எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில், 140 கோடி மக்கள் தொகையில் 50 கோடி பேர் யு.பி.ஐ., பயன்படுத்துகின்றனர். இதற்கு ஸ்மார்ட் போன் மிகவும் அவசியமாகிறது. இணைய வசதி இருந்தால் மட்டுமே யுபிஐ பரிவர்த்தனையை செய்ய முடியும்.
யுபிஐ வசதியை பயன்படுத்த முடியாதோர்
ஆனாலும் இன்றும் பட்டன் போன் வைத்திருப்பவர்கள், டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்ள தெரியாதவர்கள் மற்றும் இணைய வசதி இல்லாத நாட்டின் தொலைதுார பகுதிகளில் வசிப்பவர்களுக்கு யுபிஐ வசதியை அணுகுவது என்பது கனவாகவே இருக்கிறது.
யுபிஐ பயன்படுத்த இயலாத 8.5 கோடி பேர்
அந்த வகையில், கிட்டத்தட்ட 8 5 கோடி பேர் யுபிஐ கட்டமைப்புக்கு வெளியில், அதை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். இவர்களையும் டிஜிட்டல் பேமென்ட் கட்டமைப்புக்குள் கொண்டு வருவதற்காக ரிசர்வ் வங்கி முடிவு செய்து அதற்கான பணிகளை தொடங்கி இருக்கிறது.
UPI 123 Pay :
என்பிசிஐ ( NPCI ) எனும் தேசிய பணப் பரிவர்த்தனை கழகமும் இணைந்து, 'யு.பி.ஐ., 123 பே' என்ற சேவையை(UPI 123PAY Service in Tamil) 2022ல் அறிமுகப்படுத்தின.
இந்த சேவையை பயன்படுத்த இணையவசதி அவசியமில்லை.
களத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
இந்நிலையில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தன் வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவையை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
பட்டன் போனில் யுபிஐ வசதி எப்படி செயல்படும்?
இந்த வசதியை பெற விரும்புவோர் வங்கி வழங்கும் குறிப்பிட்ட மொபைல் எண்ணுக்கு மிஸ்டு கால் செய்ய வேண்டும்.
அதன்பின் உங்கள் மொபைல் போனுக்கு அழைப்பு வரும்.
அப்போது பரிவர்த்தனை மதிப்பையும், உங்களுக்கான யுபிஐ பின் நம்பரையும் உள்ளிட வேண்டும்
குரல் அடிப்படையிலோ, மொபைல் கீபேட் வாயிலாகவோ உள்ளிடலாம்
இந்த சேவை, 12 இந்திய மொழிகளில் வழங்கப்படும்
இந்த வசதியை பயன்படுத்த இணையதள இணைப்பு தேவையில்லை
ஆப்லைன் பரிவர்த்தனை என்பதால் மோசடிக்கான வாய்ப்பு மிகக்குறைவு
விரைவில் பட்டன் போனிலும் யுபிஐ
இதற்காக நிதி தொழில்நுட்ப நிறுவனமான நெட்நொர்க் பீப்புள் சர்வீசஸ் டெக்னாலஜீஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. என்.பி.எஸ்.டி., எனும் இந்நிறுவனம், மிஸ்கால்பே எனும் டிஜிட்டல் பேமென்ட் தளத்து டன் இணைந்து இந்த சேவையை வழங்க உள்ளது. இந்த சேவை அறிமுகமானாலும், இந்தியாவில் பட்டன் போன் வைத்திருப்பவர்களும் யுபிஐ-யில் இணைந்து பரிவரித்தனைகளை எளிதாக மேற்கொள்ளலாம்.
=====