JP Morgan Gold Forecast 2025 Gold Rate One Sovereign Price Will Reach Rs 2 Lakh in India By 2028 Read Gold Rate Predictions in Tamil Image Courtesy : JP Morgan Gold Forecast 2025 - Gold Trend Analysis Graph
வணிகம்

ஒரு சவரன் 2 லட்சத்தை தாண்டும்-நிதி நிறுவனம் தகவல்!

சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்திருப்பது தற்காலிகமானதே வரும் காலத்தில் இந்தியாவில் தங்கத்தின் விலை உச்சத்தை தொடும் என அமெரிக்காவை சேர்ந்த பிரபல நிதி சேவை நிறுவனமான ஜேபி மோர்கன் அறிவித்துள்ளது.

Bala Murugan

தமிழகத்தில் தங்கம் விலை

JP Morgan Gold Forecast 2025 : தமிழகத்தில் தங்கத்தின் விலை தாறுமாறாக ஏரிக்கொண்டே இருக்கிறது. அதன்படி, கடந்த 4 மாதத்திற்கு முன்பு 70 ஆயிரத்தில் இருந்தது, இன்று 90 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கிடுகிடுவென தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டிப்பதன் காரணம், அமெரிக்க வரிவிதிப்பு என்று கூறினாலும் தங்கத்தின் விலையால் நடுத்தர பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்து, தங்கத்தை பற்றி யோசிப்பது கூட இல்லை என்று கூறலாம்.

நிதி நிறுவனம் அறிக்கை

9 வாரங்களாக தங்கத்தின் விலை அதிகரித்து வந்ததைப் பயன்படுத்தி வர்த்தகர்கள் கைலிருப்பதை விற்று லாபத்தை பார்ப்பதாலும் அமெரிக்க டாலர் மதிப்பு சற்று உயர்ந்திருப்பதும் தங்கம் விலை சற்று குறைந்திருப்பதற்கு காரணமாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தங்கம் விலை குறித்து ஜேபி மோர்கன் ஆய்வாளர்கள் சர்வதேச அளவில் தங்கம் ஒரு அவுன்ஸ் 4100 அமெரிக்க டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது, கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை சிறிதளவு வீழ்ச்சி கண்டிருந்தாலும், 2026ம் ஆண்டின் நான்காவது காலாண்டிற்குள் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை சராசரியாக 5,055 டாலரை எட்டக்கூடும் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க : லட்சம் தொட்டாலும் குறையாத மவுசு : 85,000 கோடிக்கு தங்கம் விற்பனை

இந்தியாவில் 2 லட்சத்தை தாண்டும்

ஒரு அவுன்ஸ் என்பது 31.1 கிராம் ஆகும். சவரன் கணக்கில் பார்த்தால், 3.8 சவரனாகும். இது ரூ.3.72 தொடங்கி ரூ.4 லட்சம் வரை விற்பனையாகிறது. இது அடுத்த ஆண்டு ரூ.4.43 லட்சமாக அதிகரிக்கும். 2026ம் ஆண்டில்(JP Morgan Gold Forecast 2025) இருந்து ஒவ்வொரு காலாண்டிலும் சுமார் 566 டன்கள் வரை முதலீட்டாளர்கள் மற்றும் மத்திய வங்கிகள் தங்கத்தை கொள்முதல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், 2028ல் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 8000 டாலரை (ரூ.5,26,500) தொட்டுவிடும். இதன் அடிப்படையில், இந்தியாவில் ஒரு சவரன் தங்கம் 2 லட்ச ரூபாய் வரை உயரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது உயர்ந்துள்ள தங்கத்தின் விலையே பொதுமக்களை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், தொடர்ந்து தங்கம் விலை உச்சத்தை தொடும் என்றால் நடுத்தர மக்களின் நிலை மற்றும் தங்கம் குறித்த சிந்திப்பது கூட கேள்விக்குள்ளாகும் என்று கணக்கிடப்படுகிறது.