OpenAI offers free One Year of ChatGPT Go in India From November 4 Read Technology News in Tamil Image Courtesy : OpenAI - ChatGPT Go Logo Photo Subject To Copyright
வணிகம்

நவம்பர் 4 ஆம் தேதி 'சாட்ஜிபிடி கோ' இலவசம் - ஓப்பன் ஏஐ அதிரடி!

OpenAI offers free One Year of ChatGPT Go in India : இந்தியர்களின் அதீத பயனை அறிந்து ஓப்பன் ஏஐ, சாட்ஜிபிடி கோ- வை இந்தியாவிற்கு ஓராண்டு காலம் இலவசமாக வழங்கியுள்ளது.

Bala Murugan

ஏஐயின் வளர்ச்சி

OpenAI offers free One Year of ChatGPT Go in India : ஏஐ தொழில்நுட்பம் என்பது இன்று நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. அதிலும் அதன் அசுர வளர்ச்சியானது மனிதன் தன்னை அப்டேட் செய்வதை காட்டிலும், மனிதனே வேண்டாம் என்ற அளவிற்கு ஏஐ அப்டேட் செய்து, மனிதனின் வேளை செய்யும் திறன் , அறிவு என அனைத்தையும் உபயோகப்படுத்தவிடாமல் சோம்பேரி ஆக்கிவிடுகிறது. அதிலும் இன்றைய நிறுவனங்கள், ஏஐ - மூலம் வேளை நடக்க இருக்கிறது என கூறி பணி நீக்கம் இன்றைய டிரென்ட் போல், வாரத்திற்கு ஒரு நிறுவனம் பணியாளர்களை வேலை நீக்கம் செய்து கொண்டிருக்கிறது.

சாட்ஜிபிடி கோ இலவசம்

இந்தியர்களுக்கு 'சாட்ஜிபிடி கோ' சேவையை ஓராண்டுக்கு இலவசமாக வழங்குவதாக ஓப்பன்ஏஐ நிறுவனம் அறிவித்துள்ளது. செய்யறிவு தொழில்நுட்பங்கள் வளர்ந்துவரும் நிலையில் அதனைப் பயன்படுத்த ஏஐ நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன. அடிப்படை வசதிகளுடன் சில செயலிகள் இலவசமாகவும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.

ஓப்பன் ஏஐயின் இலவச சாட்ஃபாட்

அதன்படி பிரபல ஏஐ உருவாக்கமான சாட்ஜிபிடியும் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப, இலவசமாக பயன்படுத்தும் 'சாட்ஜிபிடி ப்ரீ', கட்டணங்களுடன் பயன்படுத்தும் 'சாட்ஜிபிடி கோ' மற்றும் 'சாட்ஜிபிடி பிளஸ்' என பல வகைகளில் அறிமுகப்படுத்தியது. இதில் 'சாட்ஜிபிடி கோ' சாட்பாட்டை(chatbot) பயன்படுத்த மாதம் ரூ. 399 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தியர்களுக்கு இதனை ஓராண்டுக்கு இலவசமாக வழங்க ஓப்பன்எஐ நிறுவனம் முடிவெடுத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வருகிற நவம்பர் 4 ஆம் தேதி முதல் 'சாட்ஜிபிடி கோ' இலவசமாக பயனர்களுக்கு கிடைக்கும் என்றும் ஏற்கெனவே கணக்கு உள்ளவர்கள் மட்டுமின்றி புதிய பயனர்களும் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது ஏஐ பயனாளர்களுக்கு பெரிதும் உதவும் ஒரு விசயமாகும்.

ஓராண்டுக்கு இலவசம்

சாட்ஜிபிடி ப்ரீ'யைவிட 'சாட்ஜிபிடி கோ'வில்(ChatGPT GO Free in india) சில நவீன அம்சங்கள் உள்ளன. ஜிபிடி - 5 மாடலில் இது வேலை செய்கிறது. அதி விரைவாக தகவல்களைத் தருவது, கோப்புகளை ஆய்வு செய்வது என பல வேலைகளைச் செய்யும். பயனர்களின் கடினமான கேள்விகளுக்கும் பதிலளிக்கும். கடந்த ஆகஸ்டில் சாட்ஜிபிடி கோ சேவை தொடங்கப்பட்ட நிலையில் ஒரு மாதத்திற்குள் இதன் பயனர்கள் இரட்டிப்பாகியுள்ளனர். இந்தியா, சாட்ஜிபிடியின் இரண்டாவது பெரிய சந்தையாக விரைவில் மாறும் என்று ஓப்பன்ஏஐ நிறுவனம் தெரிவிக்கிறது. இதன் காரணமாக இந்தியர்களுக்கு ஓராண்டுக்கு இந்த சேவை இலவசமாக வழங்குவதாக இந்த நிறுவனம் கூறியுள்ளது.இந்த இலவசம் குறித்து ஏஐ பயானளர்கள் கேளிக்கையாக தற்போது கொடுத்துவிட்டு, அடுத்து ஆண்டு பணத்தை இரட்டிப்பாக்கிவிட போகின்றனர் என விமர்சனம் செய்து வருகின்றனர்.